+1 514-800-2610

6 இடங்கள் முன்னேறி இலங்கைக்கு பெருமை தேடி தந்த வீராங்கனை !!

2023-07-04 07:37
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து இலங்கைக்கு பெருமை தேடி தந்துள்ளார் .

சர்வதேச கிரிக்கட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் துடுப்பாட்ட வீராங்கனை பட்டியலில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலிடத்தை எட்டியுள்ளார்.

6 இடங்கள் முன்னேறி அவர் இந்த இடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் சமரி அத்தபத்து இந்த இடத்தைப் பெற்றுள்ளார்.

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் 83 பந்துகளில் 108 ஓட்டங்களை குவித்தார்.

ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சமரி அத்தபத்து 80 பந்துகளில் 140 ஓட்டங்களை விரைவாக குவித்து இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இரண்டு இன்னிங்சிலும் அவர் ஆட்டமிழக்காமல் ஆடியமை சிறப்பம்சமாகும்.

கிரிக்கட் தரவரிசையில் இலங்கை வீராங்கனை ஒருவர் முதலிடத்தை அடைவது இதுவே முதல் முறை ஆகும்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி