+1 514-800-2610

ஹெலிகாப்டர் விபத்தில் பிரபல அமெரிக்க கூடைப்பந்து வீரர் கோப் பிரயாண்ட் உயிரிழந்தார்..!

2020-01-27 13:59
உலகச் செய்திகள்

அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயாண்ட், தனது மகள் மற்றும் மூவருடன் தனி ஹெலிகாப்டரில் தவுசண்ட் ஓக்ஸ்சில் உள்ள மாம்பா அகாடமிக்கு பயிற்சி மேற்கொள்ள சென்றுள்ளார். அப்போது கலிஃபோர்னியா மாகாணத்தின் கலாபசாஸ் என்ற பகுதியில் சென்றபோது, திடீரென அவர்கள் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து, தரையில் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. 

மேலும், அந்த ஹெலிகொப்டரானது வானத்தில் 10 முறை வட்டமிட்டதாகவும், அதன் பின்னர் நெருப்பு கோளமாக தரையில் பதித்ததாகவும் தெரியவந்துள்ளது.

விபத்து ஏற்பட்டபோது கூடைப்பந்து பயிற்சிக்காக தவுசண்ட் ஓக்ஸில் உள்ள மாம்பா அகாடமிக்கு Kobe Bryant சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

Kobe Bryant மற்றும் Vanessa தம்பதிக்கு மொத்தம் நான்கு பெண் பிள்ளைகள். அதில் கியானா என்பவரே இன்று விபத்தில் தந்தையுடன் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கூடைப்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற Kobe Bryant தமது விளையாட்டு வாழ்க்கையின் 20 ஆண்டு காலத்தை Los Angeles Lakers அணியுடன் பகிர்ந்து கொண்டார்.

NBA வரலாற்றில் மொத்தம் 20 தொடர்களில் பங்கேற்று விளையாடிய ஒரே ஒரு வீரர் Kobe Bryant என்பது மட்டுமின்றி, 18 முறை All-Star பட்டங்களையும் பெற்றவர்.

 
இவர் Kobe and Vanessa Bryant Family Foundation-குடும்ப அறக்கட்டளை எனும் அமைப்பினை உருவாக்கி உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் தேவைப்படும் இளைஞர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், இளைஞர்கள் விளையாட்டு மூலம் சுறுசுறுப்பாக இருக்க ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் ஒருவர். 
 
கல்வி மற்றும் கலாச்சார செறிவூட்டல், வாய்ப்புகள் மூலம் சமூகங்களை வலுப்படுத்துவதற்காக அறக்கட்டளை நிதி உதவிகளை வழங்குவது மாத்திரமல்லாது தனித்துவமான திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் பல சமூகங்களுக்கு உதவிகளை வழங்கி நல்லதொரு சேவையாளனாக திகழ்ந்த ஒரு விளையாட்டு வீரர் Kobe Bryant என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதில் பயணித்த கோப் பிரயாண்ட் உட்பட 5 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோப் பிரயாண்ட் உயிரிழப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவரது ட்விட்டரில், கோப் பிரயாண்டின் இழப்பு கோரமானது என பதிவிட்டுள்ளார். மேலும், கோப் பிரயாண்டின் மறைவுக்கு, அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் கோப் பிரயாண்டின் இழப்பு ட்ரெண்டாகி வருகிறது.

 

துயர் பகிர்வு

அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada