+1 514-800-2610

கியூபெக்கில் இடம்பெற்ற நெடுஞ்சாலை விபத்தில் டிரக் டிரைவர் ஆபத்தான நிலையில்!

2023-06-29 13:08
கியூபெக் செய்திகள்

புதன்கிழமை பிற்பகல் கிழக்கு டவுன்ஷிப்பில் உள்ள பரி, சாலையில் இருந்து ஒரு டிரக் டிரைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த நபர் பலத்த காயமடைந்துருந்தாலும் கவலைக்கிடமான நிலையில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை 214 இல், நெடுஞ்சாலை 108 உடன் சந்திப்புக்கு அருகில் இந்த விபத்து மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கியூபெக் மாகாண காவல்துறையின் கூற்றுப்படி, டிரக் மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தது ஓட்டுனர் ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வாகனத்தை செலுத்தியுள்ளார் என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கேமில் சவோய் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பதை அறிய ஒரு புலனாய்வாளர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி