3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான திரிபோஷா வழங்கும் திட்டம் ஓராண்டுக்கு மேலாக தடைப்பட்டுள்ளதென அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம் தெரிவிக்கின்றது.
இது குழந்தைகளின் போசாக்கு தரத்தை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு கவலை வௌியிட்டுள்ளார்.
அண்மைக் காலமாக போஷாக்கு குறைபாட்டுக்கு உள்ளாகும் பிள்ளைகளின் வீதம் அதிகரித்துள்ள பின்புலத்தில் இதனை நிவர்த்தி செய்ய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சோளத்திலுள்ள அப்லாடொக்சின் அளவு குறித்து எழுந்துள்ள சந்தேகத்தால் சிறு பிள்ளைகளுக்கு திரிபோஷா தயாரிக்க முடியாதுள்ளதென அவர் குறிப்பிட்டார்.
அந்தப் பிரச்சினையை உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக தீர்த்து தருமாறு கோரியுள்ளதாக அவர் கூறினார்.