+1 514-800-2610

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான நீதியை மறுதலிக்கும் 6000ரூபாய் அவசியமா?

2020-01-24 15:06
இலங்கைச் செய்திகள்


வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுக்களுக்கான நீதியை மறுதலிக்கும் வகையில் மாதாந்தம் ஆறாயிரம் ரூபாயை வழங்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கை தொடர்பில் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன் முதற்கட்டமாக 21 யனவரி 2020 அன்று  திங்கள்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள வை.எம்.சி.ஏ ( YMCA ) மண்டபத்தில் முதலாவது விழிப்புணர்வு கூட்டம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கலந்துகொண்டு சிறீலங்கா அரசின் நயவஞ்சக நடவடிக்கைகளைக் கண்டித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தனர். விழிப்புணர்வுக் கருத்தரங்கு முடிவுற்றதும் வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைவரும் இறந்துவிட்டனர் என்ற சிறீலங்கா சனாதிபதியின் பொறுப்பற்ற கருத்தை கண்டித்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறீலங்கா அரசினால் புதிதாகத் திறக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தினை ( OMP ) எதிர்த்தும் பாரிய கவனயீர்ப்புப் போராட்டத்தினையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

தாயகத் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு அரங்ககேற்றப்பட்ட கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் அதியுச்சத்தில் போர்க்குற்றங்களும், மனித உரிமை, மனிதாபிமான சட்டங்களும் மீறப்பட்டன.

பேரழிப்பு நடைபெற்று தாசப்தம் கடந்துள்ளபோதும், தற்போது வரையில் நீதி கிடைத்ததாய் இல்லை. இவ்வாறான நிலையில் தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்; நீதிக்கான போராட்டத்தினை ஆரம்பித்து முழுவீச்சுடன் முன்னெடுத்து கொண்டிந்தபோது, 2015ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஆட்சிப்பீடமேறிய மைத்திரி- ரணில் அரசு ஜெனீவாவில் நிறைவேற்றிய 30.1தீர்மானத்திற்கு ஆதரவளித்தது.

அத்துடன் பொறுப்புக்கூறலை செய்வதாகவும் சர்வதேச சமுகத்தின் முன் ஒப்புக்கொண்டு இணை அனுசரணையும் வழங்கியது. பின்னர் சர்வதேசத்திடம் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக, வலிந்து காணாமலாக்கப்பட்ட அலுவலகத்தினை உருவாக்கியது.

இருப்பனும் காணாலமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம் தற்போது வரையில் எந்தவொரு காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுக்கும் பொறுப்புக்கூறாது ஏற்கனவே பரணகம, மற்றும் எல்.எல்.ஆர்.சி.யின் பதிவுகளை மையப்படுத்திக் கொண்டு தாயகத்தில் தனது கிளைக் காரியாலங்களை மட்டும் நிறுவ முயற்சிகளை எடுத்து வந்திருந்தது.

தனியே தனது ஆட்சியைத் தக்கவத்துக்கொள்வதற்காக இழப்பீட்டு பணியகத்திற்கான சட்டத்தினையும் இயற்றிய சிறிலங்கா அரசாங்கம் அதன் ஊடாக காணாமலாக்கப்பட்ட தாயக உறவுகளுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபா நிதியை வழங்கி நீதிக்காக வீதியில் இறங்கயிருப்பவர்களை வாயடைக்கச் செய்து விடுவோம் என்ற முயற்சிகளையே முன்னெடுத்து வந்திருந்தது.

நிலைமாறுகால நீதிப்பொறிமுறையின் பிரகாரம் சம்பவங்களை கண்டறிவதற்காக அல்லது பதிவு செய்வதற்காக காணாமலாக்கப்பட்ட அலுவலகம் நிறுவப்பட்டிருக்கின்றது. அடுத்து அதுபற்றி விசாரணைக்கான பொறிமுறை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கான கட்டமைப்பொன்று அமையாது எவ்வாறு இழப்பீடுகளை வழங்குவதற்குரிய கட்டமைப்பினை நோக்கி நகர முடியும் என்பது கேள்வியாகின்றது.

ஆகவே நீதியை மறுதலிக்கும் அரசாங்கத்தின் பெரும் கபடநாடகம் பற்றி தாயகத்தின் எட்டுமாவட்டங்களிலும் தொடர் விளிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி