+1 514-800-2610

ஐரோப்பா சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில் பிரான்ஸ் வெற்றி !!

2023-06-17 06:53
விளையாட்டுச் செய்திகள்

முதலிடத்தை கைப்பற்றி உள்ளது பிரான்ஸ் .

ஐரோப்பா சாம்பியன்ஷிப் தகுதிச் சுற்றில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான பிரான்ஸ் ஜிப்ரால்டரை எதிர்கொண்டது.

இதில் பிரான்ஸ் 3-0 என வெற்றி பெற்றது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் கிங்ஸ்லி வழங்கிய பந்தை சிறப்பான முறையில் கோலாக்கினார் ஜிராடு.

பிரான்ஸ் அணிக்காக அவர் அடித்த 54-வது கோல் இதுவாகும்.

அதன்பிறகு முதல் பாதிநேரம் ஆட்டம் முடியும் தருவாயில் இருக்கும்போது பெனால்டி வாய்ப்பு மூலம் எம்பாப்பே ஒரு கோல் அடித்தார்.

இதன் மூலம் பிரான்ஸ் அணிக்காக எம்பாப்வே அடித்த கோல்கள் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.

2-வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் மேலும் ஒரு கோல் அடிக்க 3-0 என வெற்றி பெற்றது.

நேற்று நடைபெற்ற மற்ற ஆட்டங்களில் பின்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, உக்ரைன், கிரீஸ், அர்மேனியா, டென்மார்க், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், கஜகஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன.

'பி' பிரிவில் இடம்பிடித்துள்ள பிரான்ஸ் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றிபெற்று முதல் இடம் வகிக்கிறது.

 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி