+1 514-800-2610

இன்று ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள்.!

2020-01-24 14:48
இலங்கைச் செய்திகள்
 

2006 இல் உயர்தரக் கல்வியை முடித்து பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை கடற்கரையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

படுகொலை செய்யப்பட்ட இந்த மாணவர்களை இவர் நிழற்படமெடுத்து செய்தி வெளியிட்டிருந்தார். 
மாணவர்களின் இறப்புக்கு கைகுண்டுத் தாக்குதலே காரணம் என்று விசாரணையை திசைதிருப்ப முயற்சிக்கப்பட்டபோது, இவர் எடுத்த நிழற்படங்கள் தலையில் சுடப்பட்டு இறந்ததை தெளிவாக எடுத்துக் காட்டின. இதனால் அரசுக்கு சர்வதேச ரீதியில் அவப்பெயரும், அழுத்தங்களும் ஏற்பட்டன.

அத்துடன், கொலை செய்யப்படுவதற்கு முதல் நாள், அரசு சார்பு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் திருகோணமலையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அடங்கிய தகவல்களை, இவர் சுடரொளியில் வெளியிட்டிருந்தார்.

சுகிர்தராஜன் மட்டக்களப்பு, குருமண்வெளியில் பிறந்தார். தந்தையார் சுப்பிரமணியம். தாயார் அருள் ஞானம்மா. அம்பாறை வீரமுனையை வசிப்பிடமாகக் கொண்ட இவர், திருகோணமையில் பணி நிமித்தம் தங்கியிருந்தார்.

பாண்டிருப்பு கதிர்ப்பு கலை இலக்கிய வட்டத்தின் தாபகத் தலைவரான இவர், 1997 இல் இலங்கைத் துறைமுக அதிகார சபையின் ஊழியராக  பணியாற்றினார். அத்துடன்,  சுடரொளி, உதயன் ஆகிய பத்திரிகைகளின் திருகோணமலை நிருபராகக் கடமையாற்றிய இவர் - வீரகேசரி, மெற்றோ நியூஸ் ஆகியவற்றில் அரசியல் கட்டுரைகள் எழுதிவந்தார். வீரகேசரியில் -  எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும், மெற்றோ நியூசில் - ஈழவன் என்ற பெயரிலும் துணிச்சலுடன் அரசியல் விடயங்களை வெளிச்சப்படுத்தி எழுதி வந்தார்.

இவருக்கு மிதுசா(19), சதுர்சன் (17) என்று 2 பிள்ளைகள் இருக்கின்றனர்.

உள்ளதை உள்ளபடி உலகுக்கு வெளிப்படுத்தும் ஊடக பணியை, நேர்மையாக செய்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருப்பதில்லை. இதில்  பலியானவர்களின் தொகை எண்ணிலடங்கா.  அவர்களுக்கு நாம் செய்யும் ஒரே நன்றிக்கடன், அவர்களின் நினைவு நாளில் அவர்களுக்கான மரியாதையை செலுத்துவதும், அவர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் நினைவு கூருவதுமாகும்.

தனது 36 ஆவது வயதில் உயிரிழந்த சுகிர்தராஜன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்  உரித்தாகட்டும்.

துயர் பகிர்வு

அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada