+1 514-800-2610

பொது இடத்தில் உறவுக்கு வர மறுத்த காதலியை தாக்கிய காதலன் !!

2023-06-03 06:56
இந்திய செய்திகள்


மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் லுப்னா ஜாவேத் சுக்தே (28). இவர் ஆகாஷ் முகர்ஜி (22) என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் மும்பை, பாந்த்ராவில் உள்ள கடற்கரைக்கு நேற்று முன்தினம் இரவு சென்றனர். லுப்னாவிடம் ஆகாஷ் நெருக்கமாக இருந்துள்ளார்.

ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் பொது இடத்தில் உறவு வைத்துக் கொள்ள ஆகாஷ் முயன்றபோது அதை லுப்னா மறுத்துள்ளார்.


மீண்டும், மீண்டும் ஆகாஷ் வற்புறுத்த லுப்னா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் லுப்னாவின் தலைமுடியை இழுத்துப் பிடித்து பாறையில் மோதியுள்ளார்.

ஆகாஷ் தாக்கியதில் லுப்னாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதனையடுத்து, லுப்னாவை தரதரவென இழுத்துச் சென்ற ஆகாஷ் கடல் தண்ணீரில் மூழ்கடித்து கொலை முயற்சி செய்துள்ளார்.

வலி தாங்க முடியாமல் லுப்னா அலறி கத்தி கூச்சல் போட்டுள்ளார்.

இவரின் அலறலைப் பார்த்த பொதுமக்கள் ஓடி வந்து ஆகாஷை வெளுத்து வாங்கினர்.

இதனையடுத்து, ஆகாஷிடமிருந்து லுப்னாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆகாஷை கைது செய்தனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி