இலங்கை யாழ்பாணத்தில் இருந்து 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரைக்கு வந்துள்ளனர்.
இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியினால் விலைவாசி ஏற்றம் தொழில் வாய்ப்பு இல்லாததால் அங்கு வாழ வழியின்றி அப்பாவி மக்கள் அபயம் தேடி அகதிகளாக இந்தியாவிற்கு வருவது தொடர்ந்து வருவது தொடர்ந்து வருகிறது. பொருளாதார சீரழிவு தொடங்கியதுமுதல் இலங்கையிலிருந்து இதுவரை 253 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ள நிலையில்
இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த விஜயன் (46), அவரது மனைவி ரஜினி (45), மகள் தபெந்தினி (18) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 1 ஆண், 2 பெண்கள், உட்பட 3 பேர் அகதிகளாக இந்தியா செல்ல திட்டமிட்டு நேற்று (25.05.23) யாழ்பாணத்திலிருந்து புறப்பட்டு மன்னார் பேசாலகக்கு வந்து அங்கிருந்து இரவு 8 மணியளவில் புறப்பட்டு நள்ளிரவு 02.00 மணிக்கு தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கோவில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை அப்பகுதிக்கு ரோந்துசென்ற ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 3 பேரையும் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாணை செய்து வருகின்றனர்.