பத்து தல படம் ஏன்டா நடித்தோம் என்று இருந்துச்சு -நடிகர் சந்தோஷ் பிரதாப் !!
இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'.
இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.
இதில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் நாளை (மே 26) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் போஸ்டர்கள், டீசர், பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.
இந்நிலையில், கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் குறித்து நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறியதாவது, 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் எனக்கு முக்கியமான திரைப்படம். ஆனால், ரசிகர்களை பொறுத்த வரை படத்தை எப்படி வரவேற்பார்கள் என்று தெரியாது.
'பத்து தல' படத்தில் ஏன் நடித்தோம் என்ற சின்ன பயம் இருந்தது. ஆனால், மக்கள் அதை பாராட்டினார்கள்.
நான் வீட்டில் கூட சொல்லவில்லை அப்படி ஒரு படம் நடித்தேன் என்று.
'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் பார்த்து விட்டு தயாரிப்பாளர்கள் பலர் என் கதாபாத்திரம் நன்றாக இருப்பதாக பாராட்டினார்கள் என்று கூறினார்.