+1 514-800-2610

காலநிலை நெருக்கடியால் தங்கள் உயிருக்கு ஆபத்து என கருதும் மக்களை அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்புவது சட்டவிரோதமானது - ஐநாவின் மனித உரிமை குழு

2020-01-23 06:05
உலகச் செய்திகள்

காலநிலை நெருக்கடியால் தங்கள் உயிருக்கு ஆபத்து என கருதும் மக்களை அவர்களது நாட்டிற்கு திருப்பியனுப்புவது சட்டவிரோதமானது என ஐநாவின் மனித உரிமை குழு தீர்ப்பளித்துள்ளது.

பசுபிக் நாடான கிரிபட்டியை சேர்ந்த நபர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கு தொடர்பிலேயே ஐநா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடல்மட்டம் அதிகரிப்பதால் அதிகளவு ஆபத்தை எதிர்கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக கருதப்படும் கிரிபட்டியை சேர்ந்த நபர் ஒருவர், தனக்கும் தனது குடும்பத்தினரினது உயிருக்கும் ஆபத்துள்ளதாக தெரிவித்து கடந்த 2013 இல் நியுசிலாந்தில் பாதுகாப்பு விசாவிற்காக விண்ணப்பித்திருந்த நிலையில், நியுசிலாந்து நீதிமன்றம் அவரின் விசா கோரிக்கையை நிராகரித்து அவரை தனது சொந்தநாட்டிற்கு திருப்பி அனுப்பிய நிலையில் ஐநா மனித உரிமைகள் குழு இது குறித்து விசாரணை செய்துள்ளது.

குறிப்பிட்ட குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது கடல்மட்டம் அதிகரிப்பதாலும் ஏனைய தீவுகளில் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாலும் குறித்த நபர் வாழும் தீவில் சனத்தொகை பல மடங்காக அதிகரித்துள்ளதும் அங்கு சமூக குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட அந்த நபர் தனது பகுதியில் சுத்தமான நீர் இல்லையெனவும்,உவர் நீர் பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியாது எனவும் தனது குடும்பத்தவர்களின் உயிருக்கு ஆபத்து எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் அவரது புகலிடக்கோரிக்கையை நியுசிலாந்து நீதிமன்றம் நிராகரித்துள்ளது.அவரின் உயிருக்கு ஆபத்தில்லை என்பதை தனது தீர்ப்பில் தெரிவித்துள்ள ஐநா, எனினும் எதிர்காலத்தில் காலநிலை அகதிகளை திருப்பி அனுப்புவதை தவிர்க்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகளை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்புவது அவர்களின் உரிமை மறுக்கப்படுவதற்கு வழிவகுக்கலாம் எனவும் ஐநா சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் ஒரு நாடே நீரில் மூழ்கும் நிலை என்பது மிகவும் ஆபத்தானது என குறிப்பிட்டுள்ள ஐநா குழு, அந்த நாட்டில் கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமை இல்லாமல் போகலாம் எனவும் கூறியுள்ளது.

துயர் பகிர்வு

அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada