+1 514-800-2610

நோய்களை குணப்படுத்தும் கொய்யப்பழம்!!

2023-05-19 10:22
எம்மவர் நிகழ்வுகள்

கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்தவும் மிகவும் உதவி செய்கிறது.

கொய்யாவில் தான் அதிக வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன.

நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது. ஒரே நாளில் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டது கொய்யா. தொப்பையை குறைக்கும்.

வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் சருமம் பொலிவு பெரும். மினுமினுப்புக் கூடி, தோல் சுருக்கம் குறையும். கண் கோளாறுகள் விலகும். இது உடம்பிற்கு குளிர்ச்சியைக் கொடுக்ககூடியது.

பொட்டசியச் சத்து ரத்த அழுத்தத்தை சீராக்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.

வாயுத்தொல்லைக்கு தீர்வளிப்பதுடன் வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றிலிருந்தும் நிவாரணம் அளிக்கும். கொழுப்புச் சத்து குறைவான பழம் என்பதால் பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது. அருமையான கனிச்சாறு கொண்டுள்ளதால் குடல் புண்ணை ஆற்றும் வல்லமை கொண்டது. கொய்யாப் பழம் மட்டுமல்லாமல், கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை போன்றவற்றிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி