+1 514-800-2610

சுவையான அன்னாசிப்பழ அல்வா!!

2023-05-12 07:24
எம்மவர் நிகழ்வுகள்

தேவையான பொருட்கள்

அன்னாச்சிப் பழத்துண்டுகள் - 1 கப்

பால் - 1 கப்

சர்க்கரை - 1 கப்

ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி

உப்பு - 1 சிட்டிகை

நெய் - 3/4 கப்

கேசரிப் பவுடர் - 1/4 தேக்கரண்டி

தண்ணீர் - 1/4 டம்ளர்

செய்முறை :

  • முதலில் அன்னாசிப்பழத் துண்டுகளை ஆவியில் வேக வைக்கவும். ஆறியபின் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
  • தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கம்பிப்பதம் வரும் வரை கிளற வேண்டும்.
  • இதில், அரைத்து வைத்துள்ள அன்னாசிப்பழ விழுது, ஒரு சிட்டிகை உப்பு, நெய், ஏலப்பொடி, கேசரிபவுடர், நெய்யில் வறுத்த திராட்டை ஆகியவை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.
  • அன்னாச்சிப்பழ ஜூஸ் எடுத்து தண்ணீருக்குப் பதில் ஜூஸை ஊற்றி, இதே முறையில் அல்வா தயார் செய்யலாம். இப்போது சூப்பரான அன்னாசி அல்வா ரெடி.

 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி