இலங்கை Esports National Trials 2023 - Dialog மூலம் இயக்கப்படுகிறது
2023-05-09 08:36
விளையாட்டுச் செய்திகள்
கேமர்.எல்.கே உடன் இணைந்து ஸ்ரீலங்கா எஸ்போர்ட்ஸ் ஏற்பாடு செய்துள்ள நேஷனல் எஸ்போர்ட்ஸ் டீம்ஸ் ட்ரயல்ஸ், இலங்கையின் முதன்மையான இணைப்பு வழங்குநரான டயலொக் ஆக்ஸியாட்டா பிஎல்சியின் முதன்மை அனுசரணையால் உலகளாவிய நிலையில் இயக்கப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக இலங்கையில் Esports வேகமாக வளர்ந்து வருகிறது.
மேலும் சர்வதேச Esports Federation இன் உலக சாம்பியன்ஷிப் மற்றும் Global Esports Games போன்ற சர்வதேச போட்டிகளில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய உயர்மட்ட Esport விளையாட்டு வீரர்களை நாடு உருவாக்கியுள்ளது.
இலங்கை எஸ்போர்ட்ஸ் தேசிய அணிகளுக்கு மிகவும் திறமையான வீரர்களை தெரிவு செய்வதன் மூலம் இந்த வேகத்தை அதிகரிக்க உத்தேசித்துள்ளது.