இந்திய விமானப்படை விமானமொன்று வீடொன்றின் மீது வீழ்ந்ததால் பலியான பொதுமக்கள்!!
இந்திய விமானப்படை விமானமொன்று, வீடொன்றின் மீது வீழ்ந்ததால் பொதுமக்கள் மூவர் பலியானதுடன் மேலும் சிவர் காயமடந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஹனுமான்கார் மாவட்டத்தில் இன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ரஷ்ய தயாரிப்பான மிக் -21 ரக விமானமொன்றே இவ்வாறு வீழ்ந்துள்ளது.
இவ்விமானம் வீழ்ந்ததை இந்திய விமானப்படைஉறுதிப்படுத்தியுள்
சூரத்கார் நகரிலுள்ள விமானப்பபடைத் தளத்திலிருந்து பயிற்சி நடவடிக்கைக்காக சென்றிருந்த விமானமொன்றே இன்று காலை 9.45 மணியளவில் வீழ்ந்தள்ளது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இவ்விமானி சூரத்கார் தளத்திலிருந்து வடகிழக்கே 25 கிலோமீற்றர் தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இவ்விமானம் ஹனுமான்கார் மாவட்டத்தின் பஹ்லோ நகரிலுள்ள வீடொன்றின் மீது வீழ்ந்ததால், துரதிஷ்டவசமாக 3 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.