+1 514-800-2610

இலங்கை அணி இன்னிங்ஸால் அபார வெற்றி!!

2023-04-28 07:26
விளையாட்டுச் செய்திகள்

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையில் காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி 2 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக 492 ஓட்டங்களைப் பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 704 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

குசல் மெண்டிஸ் (245), நிஷான் மதுஷ்க (205) ஆகியோர் இரட்டை சதம் அடித்தனர்.

இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க 211 ஓட்டங்களை துரத்திய அயர்லாந்து தனது இரண்டாவது இன்னிங்ஸில் 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அதன்படி, இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி