+1 514-800-2610

‘பொங்கலோ பொங்கல்’ என வாழ்த்தி விழாவுக்கு மகுடம் சூட்டிய பிரதமர் லீ

2020-01-20 05:52
உலகச் செய்திகள்

பொங்கல் விழா பொதுவாக தமிழர்களின் விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தாலும் சிங்கப்பூரைப் பொறுத்தவரை அது பல இனத்தவர், பல சமயத்தினர் ஒன்றுகூடி கொண்டாடி மகிழும் நல்லிணக்கத் திருவிழாவாக அனுசரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். 

“ஒவ்வோர் ஆண்டும், அரிசியும் பாலும் நிரம்பிய சூடான பானையில் பொங்கல் பொங்கவேண்டும் என்றும் நாம் அனைவரும்  ‘பொங்கலோ பொங்கல்’ எனச் சொல்ல வேண்டும் என்றும் விரும்புகிறேன்,” என்றும் அவர் கூறினார். பெண்டிங் எல்ஆர்டி நிலையம் அருகிலுள்ள வெளிப்புறத் திடலில் நேற்றுக் காலை 9.30 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 3,000 பேர் கூடினர். கொண்டாட்டத்தில் புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டியோ ஹோ பின்னும் இணைந்துகொண்டார்.

ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் திரு லியாங் எங் ஹுவாவும் நிகழ்ச் சியில் பங்கேற்றனர். புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் நல்ல போக்குவரத்துக் கட்டமைப்பு இருப்பதாகக் கூறிய டாக்டர் டியோ, அங்குள்ள இலகு ரயில் சேவையின் புதுப்பிப்புப் பணிகள் 2024ஆம் ஆண்டுவாக்கில் நிறைவடையக்கூடும் என்றார். தனி

நபர் நடமாட்டச் சாதனங்களும் செல்லக்கூடிய கூடுதலான சைக்கிள் தடங்கள் கட்டப்படுவதாகவும் அவர் கூறினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாரம்பரியமான குத்துவிளக்கை ஏற்றிய பின்னர் பிரதமர் லீ, பொங்கல் பானையில் பால் ஊற்றிக் கிளறுவது, உரலில் அரிசியை இடிப்பது, முறத்தால் அரிசியைப் புடைப்பது போன்ற நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டார். அத்துடன் விக்னேஷ் பால்பண்ணையிலிருந்து தருவிக்கப்பட்ட ஆடு, மாடுகளையும் அவர் பார்வையிட்டார். வெவ்வேறு இன நடனங்களும் பாடல் அங்கங்களும் பிரதமர் முன்னிலையில் படைக்கப்பட்டன. 

சீனர், மலாய்க்காரர்களைத் தவிர, மெக்சிகோ, மியன்மார், பிலிப்பீன்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோரும்  தமிழர் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கல் வைத்தனர். “பொங்கல் வைக்க ஏற்பாட்டாளர்கள் எனக்குப் பொறுமையுடன் கற்பித்தனர்,” என்றார் பலவண்ணப் புடவையை அணிந்திருந்த சிங்கப்பூர் மெக்சிகோ சங்கத் தலைவர் அஸுல் அகுவிலார். இந்திய உணவும் அக்கம்பக்கத்தாரும் நிறைந்த நிகழ்ச்சி என்பதால் இங்கு வந்திருப்பதாகக் கூறினார் 70 வயது குடியிருப்பாளர் யூன் அன். 

சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் அங்கத்தில் தமது மகன் கலந்துகொண்டு மகிழ்ந்ததாக 33 வயது இல்லத்தரசி வி. திரிவேணி தெரிவித்தார்.  பள்ளி நண்பர்களைக் காண்பதற்காக 15 வயது முதல் இக்கொண்டாட்டங்களுக்கு ஆண்டு

தோறும் வருவதாகக் கூறிய பாதுகாவல் மேலதிகாரி ஃபதுரா, 20, இம்முறை தமது ஆறு மாதக் குழந்தையுடன் வந்திருப்பதாகச் சொன்னார்.70க்கும் அதிகமான தமிழர் அல்லாதவர்கள் வேட்டி, சேலை அணிந்து ஒன்று கூடியதே இவ்வாண்டின்  சிறப்பம்சம் என நிகழ்ச்சியின் தலைமை ஏற்பாட்டாளரும்  புக்கிட் பாஞ்சாங் ஒருங்கிணைப்பு மற்றும் இயல்புரிமைக் குழுவின் தலைவருமான திரு பெருமாள் மூர்த்தி தெரிவித்தார். 

 

 
துயர் பகிர்வு

அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada