+1 514-800-2610

WhatsAppஇல் அறிமுகமில்லாதவர்களை அறிமுகப்படுத்தும் புதிய வசதி !

2023-03-19 06:19
தொழில்நுட்பம்

WhatsApp உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. தங்களது பயனர்களின் வசதிக்கு ஏற்ப அவ்வப்பொழுது பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே வருகின்றது.

அந்த வகையில் தற்பொழுது WhatsApp Group Chat பகுதியில் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக சில நேரங்களில் Group Chat பகுதியில் எமக்குத் தெரியாத நபர்களும் இணைந்திருப்பார்கள்.இந்தநிலையில், அவ்வாறு இலக்கத்தை பதிவு செய்யாத Unknown contactகளிடம் இருந்து வரும் Message Notificationஇல், அவர்களது Mobile இலக்கம் மாத்திரமே காண்பிக்கப்படும்.

Group Chat பக்கம் சென்று பார்த்தால் மாத்திரமே அவர்களது Username தெரிய வரும்.

இந்தநிலையில் தற்பொழுது புதிய Updateஇல் WhatsApp Group Chat பக்கத்தில் Unknown contactஇடமிருந்து Message வந்தால் அவர்களின் Mobile இலக்கத்திற்குப் பதிலாக அவர்களுடைய பெயர் (Username) Notificationஇல் காண்பிக்கும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதிகளவிலான உறுப்பினர்களைக்கொண்ட Group Chat பக்கத்திலிருந்து Message வரும்பொழுது, இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி