+1 514-800-2610

லவால் தினப்பராமரிப்பு நிலையத்திற்குள் பேருந்து மோதியதில் இரண்டு சிறுவர்கள் பலி..!!

2023-02-08 23:48
கியூபெக் செய்திகள்

லவால் செயின்ட் -ரோஸ் பகுதியில் அமைத்திருந்த சிறுவர் தினப்பராமரிப்பு நிலையத்துக்குள் லவால் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து , சாரதியின் கட்டுப்பாட்டை மீறி கட்டிடத்துக்குள் சென்றதனால் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் 7 சிறுவர்கள் காயத்துக்குளானதாக லவால் மாநகர காவல் துறையினர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 8:30 மணியளவில் நடைபெற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தார்கள், இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த விபத்தை நேரில் பார்த்த அயல் வீட்டுக்காரர் கூறுகையில், தானும் பராமரிப்பு நிலையத்துக்கு வருகை தந்த பெற்றோர் குழுவும் பேருந்தின் அடியில் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்க முயன்றதாகவும் தெரிவித்தார்.

ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக லாவல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் எரிகா லேண்ட்ரி தெரிவித்தார். ஏழு குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் மற்றும் ஒரு குழந்தை மருத்துவமனையில் இறந்தார் மேலும் ஒரு பெரியவர் அதிர்ச்சியில் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புபட்ட 51 வயதான சாரதி புதன்கிழமை பிற்பகல், மருத்துவமனையில் நோயாளர்களை படுக்கவைக்கின்ற படுக்கையில் படுத்திருந்தபடி செயின்ட்-அமண்ட் நீதிமன்றத்தில் ஆஜரானார். இருந்தபோதும் குற்றம் சுமத்தப்பட்ட சாரதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தகுதியான உடல் நிலையில் இருக்கின்றா என்று பல முறை சோதனை மேற்கொள்ள பட்ட நிலையில் இறுதியில் நிலைமை சீர்செய்யப்பட்டு நீதி மன்றத்துக்கு ஆஜர் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பத்துடன் தொடர்புபட்ட சாரதி தொடர்பாக கருத்து தெரிவித்த லவால் காவல் துறையினர், கடந்த 10 வருடங்களாக தொடர்ந்து லவால் மாநகர போக்குவரத்து சேவையாற்றி வருகின்ற போதும் எதுவிதமான
குற்றங்களிலும் எடுபடவில்லை என தெரிவித்தார்.

மேலும் சம்பவத்தை நேரில் பார்த்த பென் சாபனே என்பவர் தெரிவிக்கையில் சம்பவத்தை அடுத்து சாரதி பேருந்தில் இருந்து வெளிவருகின்ற போது நிர்வாணமான நிலையில் கடுமையாக கத்தியவாறு தனது ஆடைகளை பிடித்தவாறு வெளியிலே வந்த போது தாம் அவரை பிடித்ததாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை அடுத்து லெவல் மாநகர மேயர் ஸ்டபான் போயர் , விமி பாராளுமன்ற உறுப்பினர் அனி குத்துரைக்கிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் எல்-கூறி ஆகியோர் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

 

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி