WhatsApp செயலியானது பல புதிய வசதிகளை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்திக்கொண்டே வருகின்றது.
குறிப்பாக WhatsApp செயலியில் நாங்கள் Video எடுக்க வேண்டுமென்றால், சிவப்பு நிறத்தில் உள்ள Icon ஐ அழுத்திப் பிடித்துக்கொண்டே இருக்க வேண்டும். எப்பொழுது Videoவை முடிக்க வேண்டுமோ, அவ்வளவு நேரம் அழுத்திப் பிடித்தவாறே இருந்தால்தான் Video பதிவாகும்.
பல வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது WhatsAppஇல் ஒரே Clickஇல் Video எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .
இந்த வசதியின் மூலம் பயனர்கள் WhatsAppஇல் Hands-Free Videoக்களை பதிவுசெய்துகொள்ள முடியும்.
குறித்த புதிய Video பயன்முறை வசதியானது Android 2.23.2.73 Updateஇல் வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த புதிய வசதியைப் பெற விரும்பும் பயனர்கள் தங்களது Smartphoneஇல் உள்ள WhatsApp செயலியை Update செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று WhatsApp தெரிவித்துள்ளது.