+1 514-800-2610

முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன் அதிரடியாகக் கைது!

2020-01-14 13:54
இலங்கைச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் நுகேகொட நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிடுவதன்மூலம் அரசியலமைப்பின் பிரிவு 111 சி (2) இன் பிரகாரம் அவர் குற்றவாளி எனபதனாலேயே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சமகால அரசியலில் யாருமே எதிர்பாராத வகையில் மிகப்பெரும் அவமான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி குரல்பதிவுகள் கசிவானது ஐ.தே.க விற்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.ஐதேக ஆட்சிக்கு வந்திருந்தால் ஊழல், மோசடி மற்றும் பாலியல் விவகாரங்களுக்கு எதிரான அமைச்சராக எதிர்வு கூறப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க பல்வேறு ஊழல் மோசடி விவகாரங்களுக்கு துணை போயிருப்பது தற்போது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.ரகசிய தொலைபேசி உரையாடல் மூலம் நீதித்துறை உட்பட பல்வேறு விடயங்களை கேள்விக்குட்படுத்தியிருக்கின்ற ரஞ்சன் ராமநாயக்கவை கட்சியின் அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தவும் தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவித்தலை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இன்று காலை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், கடந்த ஆட்சியில் நீதித்துறையில் தலையிட்டு அழுத்தங்கள் செலுத்திய விவகாரம் தொடர்பிலேயே தற்போது அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சர்ச்சையில் சிக்கிய ரஞ்சன், ஏற்கனவே கைது செய்து விடுதலை செய்யப்பட்டிருந்த போதிலும், மீண்டும் அவரை கைது செய்யுமாறு உத்தரவிட்டமை அரசியல் மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

துயர் பகிர்வு

அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada