தற்பொழுது WhatsApp புதியதொரு வசதியினை அறிமுகப்படுத்தவுள்ளது.
WhatsApp தற்பொழுது "Delete for Everyone" என்பதற்குப் பதிலாக "Delete for Me"ஐ யாராவது ஒரு பயனர் தேர்ந்தெடுத்தால், அதனை சரிசெய்யும் வகையில் புதிய வசதியைக் கொண்டு வந்துள்ளது.
"Delete for Me" என்பதை Click செய்தால், உடனே அதன் அருகில் "Undo" என்று புதியதொரு Option திரையில் தோன்றும். இதனை Click செய்துகொள்வதன் மூலம், மீண்டும் நீங்கள் Delete செய்த Messageஐ திரையில் கொண்டு வரமுடியம்.
பின்னர் Delete செய்ய வேண்டிய Messageஐ மறுபடியும் கவனமாகப் பார்த்து "Delete for Everyone" என்பதைத் தெரிவுசெய்து Delete செய்துகொள்ள முடியும்.
விரைவில் அனைத்துப் பயனர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.