+1 514-800-2610

லாவல் செயிண்ட்-டோரோதி பகுதியில் இரண்டு குழந்தைககள் கொலை - தந்தை கைது..!!

2022-10-18 22:19
கியூபெக் செய்திகள்

லவால் மாநகர சபைக்கு உட்பட்ட செயிண்ட்-டோரோதி பகுதியில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டதாக
காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் எரிகா லாண்ட்ரி செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் சம்பவம் தொடர்பாக செய்தி வெளியிட்ட அவர், Anzel Arora, 13, மற்றும் Aaron Arora, 10, ஆகியோர் திங்கள்கிழமை மாலை Sainte-Dorothée இல் உள்ள rue Lauzon இல் உள்ள அவர்களது வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட கமல்ஜித் அரோரா என்ற 45 வயது நபர் முதல்நிலை கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.குற்றம் சாட்டப்பட்ட கமல்ஜித் அரோரா கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் தந்தை எனவும் தெரிய வந்துள்ளது.

குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து வீட்டிக்கு சென்ற வேளையில் அவரது வீட்டில் மூச்சு விடுவதில் சிரமத்துடன் இறந்த குழந்தைகளுடன் தரையில் கிடந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

காவல் துறையின் தகவலின்படி, சம்பவத்தின் போது மூன்றாவது நபர் இருந்ததாகவும், போலீசார் வருவதற்குள் தப்பியோடியுள்ளார்.தப்பியோடிய நபர் தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது, மேலும் சம்பவம் தொடர்பான சாட்சிகள் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளால் பேட்டி காணப்பட்டனர். இன்றைய தினம் செய்தி வெளியிட்ட காவல்துறை கமல்ஜித் அரோராவின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று உறுதி செய்தனர்.

மேலும் அவர் செவ்வாய்கிழமை பிற்பகல் லாவல் நீதிமன்றத்தில் காவல் துறையினரால் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிவிக்கபட்டபோதும். அவரது உடல்நிலை காரணமாக செவ்வாய்கிழமை லாவல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜராக முடியவில்லை. ஆகவே புதன்கிழமைக்கு நீதிமன்ற விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி