+1 514-800-2610

ஈரானில் பதற்றம் : அதிகரிக்க காத்திருக்கும் கச்சா எண்ணெய் விலை!

2020-01-09 14:40
உலகச் செய்திகள்

ஈரான் ராணுவ தளபதி மீதான அமெரிக்காவின் தாக்குதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் அபாயம் உருவாகியுள்ளது.

ஈரான் ராணுவத் தளபதியை அமெரிக்கா சுட்டுக்கொன்ற விவகாரம் எதிரொலியாக, கச்சா எண்ணெய் விலையை ஒரே நாளில் 3 டாலர் அளவுக்கு உயர்த்தி ஈரான் அறிவித்துள்ளது, சர்வதேச எண்ணெய் நுகர்வோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

கச்சா எண்ணெய் விலையில் கைவைத்த ஈரான் 

ஈரானின் அணு ஆயுத கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வரும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈரான் கடும் எதிர்ப்பு காட்டி வருகிறது. இதனால் ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே எலியும் பூனையுமாக மோதல் போக்கு நீடித்து வருவதால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இந்நிலையில், இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும்,  ராணுவத் தளபதியுமான ஜெனரல் காசெம் சுலேமானீயை அமெரிக்கப் படை கொன்றதை அடுத்து, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பழிக்குப் பழி வாங்கியே தீருவோம் என்று சூளுரைத்த ஈரான், அதிரடியாக கச்சா எண்ணெய் விலையில் கைவைத்துள்ளதே இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் கவலைக்கு காரணமாகியுள்ளது. 

 

மேலும் விலை உயரும் அபாயம்

ஈரானின் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை சவரனுக்கு 700 ரூபாய் வரை உயர்த்து புதிய உச்சத்தை தொட்டுள்ள நிலையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது. பங்கு சந்தைகளில் பெரும்பாலான ஆசிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சரிவடைந்துள்ளதால், ஈரானின் நடவடிக்கையை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. 

84 சதவீதம் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்தே கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கொள்ளும் இந்தியா, எண்ணெய் இறக்குமதியில் 60 சதவீதம் அளவுக்கு மத்திய கிழக்கு நாடுகளையே சார்ந்துள்ளது. இதனால் மற்ற நாடுகளை விட இந்தியாவை அதிகம் தாக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்தாண்டின் இறுதி காலாண்டில் 15 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், ஈரான் அமெரிக்கா இடையிலான மோதலால் மேலும் 4 சதவீதம் அளவுக்கு எண்ணெய் விலை உயர்ந்துள்ளது உலகளவில் பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையை மங்க செய்வதாகவே உள்ளது.

துயர் பகிர்வு

அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada