+1 514-800-2610

120Hz AMOLED போல்டபில் ஸ்கிரீன் கொண்ட விவோ X போல்டு பிளஸ் அறிமுகம்!!

2022-09-27 01:33
தொழில்நுட்பம்

விவோ நிறுவனத்தின் இரண்டாவது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8 இன்ச் 2K பிளஸ் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே, 120Hz LTPO E5 AMOLED பேனல், 6.53 இன்ச் FHD+ E5 AMOLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளேக்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் அல்ட்ராசோனிக் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டு உள்ளது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் முந்தைய தலைமுறை மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போனில் 4730 எம்ஏஹெச் பேட்டரி, 80 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இதையும் படியுங்கள்: இன்-ஸ்கிரீன் கேமரா கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP போர்டிரெயிட் கேமரா, 8MP பெரிஸ்கோப் கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா வழங்க்பபட்டு இருக்கிறது. இத்துடன் ஏராளமான கேமரா அம்சங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2 போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது. விலை மற்றும் விற்Hனை விவரங்கள்: புதிய விவோ X போல்டு பிளஸ் ஸ்மார்ட்போன் ரெட், மவுண்டெயின் புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 100 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரத்து 520 ஆகும். இதன் விற்பனை செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்குகிறது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்