+1 514-800-2610

ரூ. 12 ஆயிரம் பட்ஜெட்டில் சாம்சங் ஸ்மார்ட் டிவி அறிமுகம்!!

2022-09-24 04:37
தொழில்நுட்பம்

ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் அங்கமாக சாம்சங் நிறுவனம் 32 இன்ச் HD டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சாம்சங் 32 இன்ச் HD டிவியில் மூன்று புறமும் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவியில் முற்றிலும் புதிய, ரி-டிசைன் செய்யப்பட்ட சாம்சங் டிவி பிளஸ் சேவை உள்ளது. இதன் மூலம் 55 நேபலை சர்வதேச மற்றும் உள்ளூர் சேனல்களை பார்க்கும் வசதி மற்றும் டைசன் டிவி ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஹை டைனமிக் ரேன்ஜ் மற்றும் பர்கலர் தொழில்நுட்பங்கள் தலைசிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகின்றன. இத்துடன் அல்ட்ரா கிளீன் வியூ தொழில்நுட்பம் உள்ளது. இது காட்சியின் ஆழத்தை மேம்படுத்தி படங்களை அதிக தரத்தில் காண்பிக்கிறது. இதையும் படியுங்கள்: கூகுள் பிளே கன்சோலில் லீக் ஆன 2023 ரெட்மி நோட் 11 ப்ரோ மேலும் இதில் உள்ள டால்பி டிஜிட்டல் பிளஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் எபெக்ட் வழங்குகிறது. இத்துடன் பிசி மோட், கேம் மோட், ஸ்கிரீன் மிரரிங் மற்றும் ஏராளமான மென்பொருள் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. சாம்சங் 32 இன்ச் HD எல்இடி ஸ்மார்ட் டைசன் டிவி அம்சங்கள் 32 இன்ச் HD 1366x768 பிக்சல் எல்இடி ஸ்கிரீன், 50Hz ரிப்ரெஷ் ரேட் 2x HDMI, 1x USB 20 வாட் ஸ்பீக்கர், டால்பி டிஜிட்டல் பிளஸ் சப்போர்ட் டைசன் ஒஎஸ் மற்றும் சாம்சங் டிவி பிளஸ் நெட்ப்ளிக்ஸ், யூடியூப், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ மற்றும் பல்வேறு ஆப்ஸ் சப்போர்ட் பிசி மோட், கேம் மோட், ஸ்கிரீன் மிரரிங் சப்போர்ட் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: சாம்சங் 32 இன்ச் HD டிவி விலை இந்திய சந்தையில் ரூ. 12 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது. ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையின் அங்கமாக இந்த டிவியை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி பெறலாம்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி