+1 514-800-2610

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் இர்பான் பதான்!

2020-01-09 14:27
விளையாட்டுச் செய்திகள்

அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இர்பான் பதான் அறிவிப்பு.

குஜராத்தின் வதோதராவை சேர்ந்த இர்ஃபான் பதான் 2003ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். ஆரம்பத்தில் ஸ்விங் மற்றும் வேகப்பந்து வீச்சாளாராக திகழ்ந்த பதானிடம், பாகிஸ்தானைச் சேர்ந்த வசீம் அக்ரமின் சாயல் இருப்பதாக ரசிகர்களால் போற்றப்பட்டார்.

2005ம் ஆண்டு இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக வந்த க்ரெக் சாப்பல் தான் பதானிடம் இருக்கும் பேட்டிங் திறனை அறிந்து அவரை ஆல்ரவுண்டராக்கும் முயற்சியை மேற்கொண்டார். அது வரை பவுலராக மட்டுமே இருந்த பதான், அதன் பிறகு ஆல்ரவுண்டராக மாறினார். டெல்லியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 93 ரன்கள் அடித்து அமர்க்களப்படுத்தினார்.

கபில் தேவுடன் ஒப்பீடு:

ஆல்ரவுண்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் அதிபட்சமாக 2வது இடம் பிடித்த பதானை கபில் தேவுடன் ஒப்பிட்டனர் ரசிகர்கள்.

முதல் ஓவரில் ஹாட்ரிக்:

பதானின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் உச்சகட்டமானது 2006ல் கராச்சி நகரில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. அந்த ஆட்டத்தின் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் பதான். இதன் மூலம் டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார்.

2007ல் நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் பதான் பெற்றார்.

கடந்த 16 ஆண்டுகளில் 29 டெஸ்ட், 120 ஒரு நாள் போட்டி மற்றும் 24 டி20 போட்டிகளில் பதான் இந்தியாவிற்காக விளையாடியிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் சரியாக 100 விக்கெட்டுகள் எடுத்துள்ள பதான், ஒட்டுமொத்தமாக 301 விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார்.

கடைசியாக விளையாடியது:

கடைசியாக இந்தியாவிற்காக 2012ல் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியில் விளையாடிய பதான் அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். 2017 ஐபிஎல்-ல் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.

இந்நிலையில் இன்று தனது ஓய்வு முடிவை வெளியிட்ட இர்பான் பதான், கங்குலி, லக்‌ஷ்மன், டிராவிட் போன்ற ஜாம்பவான்களுடன் இந்திய அணியின் ட்ரெஸிங் அறையில் ஒன்றாக கழித்தது அதிர்ஷ்டவசமான ஒன்று. எனது குடும்பத்தினருக்கு, ரசிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதான் கூறினார்.

மற்றொரு இந்திய வீரரான யூசுப் பதான், இர்பான் பதானின் சகோதரர் ஆவார்.

துயர் பகிர்வு

அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
பசுபதி சிறிசாந்தன்
பரந்தன் குமரபுரம்(பிறந்த இடம்) பிரான்ஸ் -முன்னாள் போராளி, தொழிலதிபர்
தீபா விஜேந்திரன்
யாழ். கொற்றாவத்தை ( பிறந்த இடம் ) -கனடா
Camsonic
யாழ்ப்பாணம்(பிறந்த இடம்) கனடா
சிவேந்திரன் சின்னத்தம்பி
உடுப்பிட்டி(பிறந்த இடம்) Montreal - Canada Toronto - Canada