+1 514-800-2610

மீண்டும் இரண்டாம் பாகத்தில் விஜய் ஆண்டனி.. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!!

2022-09-20 01:20
சினிமா செய்திகள்

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே ரஜினியின் எந்திரன் படத்தின் அடுத்த பாகம் 2.0 என்ற பெயரில் உருவாகி வெளியானது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம் திரைப்படம் 3 பாகங்களாக வெளியானது. கமலின் இந்தியன் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகி வருகின்றன. கோடியில் ஒருவன் - விஜய் ஆண்டனி இந்நிலையில் விஜய் ஆண்டனியின் இன்னொரு வெற்றிப்படமான 'கோடியில் ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருந்தார். ஆத்மிகா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் வலம் வருவதால் இப்படத்தை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

துயர் பகிர்வு

ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada