+1 514-800-2610

மொன்றியல் புலூஸ் வியாட்டுக்கழகம் நடாத்திய மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் - உதயநிலா விளையாட்டு கழகம் சாம்பியன்..!!

2022-06-19 00:56
கியூபெக் செய்திகள்

அமரர் ஆழ்வார் குட்டி குணசேகரம் ( கலைதாசன் ) அவர்களின் ஞாபகார்த்தமாக கலைதாசன் குடும்பத்தாரின் அனுசரணையுடன் மொன்றியல் புலூஸ் வியாட்டுக்கழகம் நடாத்திய மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி- 2022 சனிக்கிழமை மொன்றியல் கோட் கேத்தரின் மெக்கன்சி கிங் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய சீரற்ற காலநிலை காரணமாக கரப்பந்தாட்ட சுற்று போட்டி தாமதமாக நடைபெற்றது, இருந்த போதும் பெரும் திரளான மக்கள் கலந்து போட்டியினை சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடைபெற்று முடிந்த கரப்பந்தாட்ட சுற்று போட்டியில் டொரோண்டோவில் முன்னணி விளையாட்டு கழகங்களில் ஒன்றான உதயநிலா விளையாட்டு கழகம் மிகவும் சிறப்பான முறையில் விளையாடி சாம்பியன் கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.

இந்த கரப்பந்தாட்ட சுற்று போட்டியில் டொரோண்டோ, மொன்றியல், ஆகிய நகரங்களை சேர்ந்த 10 அணிகள் சிறப்பான முறையில் பங்கு பற்றி விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போட்டியில் மொன்றியல் வஸினா விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து டொரோண்டோ உதயநிலா விளையாடிய போட்டியில் 2022ம் ஆண்டுக்கான வெற்றிக் கிண்ணத்தை உதயநிலா விளையாட்டு கழகம் பெற்றுக் கொண்டது.

கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் சிறப்பாட்டகாரராக உதயகுமார் ரிஷி மற்றும் வளர்ந்து வரும் விளையாட்டு வீரருக்கான விருதினை மோகனசூரியன் பிரஷாந்த் அவர்களும் பெற்று கொண்டனர்.

 

துயர் பகிர்வு

ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada