+1 514-800-2610

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் மனித நேய ஈருருளிப்பயணம் -பன்னாட்டு ஊடகங்கள் முக்கியத்துவம்!!

2020-03-03 15:43
தாயக வலம்

தொடர்ச்சியாக 8ம் நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது.
அதே நேரம் இன்று 02.03.2020 ஜேர்மன் நாட்டின் சார்புறூக்கன் மாநகரின் உதவி நகரபிதாவைச் சந்தித்ததுடன்,

தற்போதய காலகட்டத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்கள் பல வகைகளில் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதையும், 11 ஆண்டு காலம் கழிந்தும் தமிழர் தாயகத்தில் எம் இனம் ஒரு திட்டமிட்டமுறையில் மறைமுகமான இனவழிப்புக்குள்ளாக்கப் படுகின்றார்கள் எனவும் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக   மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டம் பற்றியும், பல முக்கிய அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களினால் மனு கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மு.பகல் 11.00 மணியளவில் பிரான்ஸ் நாட்டைவந்தடைந்த ஈருருளிப்பயணம் சார்குமின் மாநகரின் நகரபிதா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அரசியல் சந்திப்பை மேற்கொண்டிருந்தது.

அதே நேரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகத்தில் மனிதநேய ஈருருளிப்பயண செயற்பாட்டாளர்களை வரவேற்கும் முகமாக தமிழ் மொழியிலேயே “வணக்கம், வரவேற்கின்றோம்”என்று நுழைவாயிலில் எழுதி வைக்கப்பட்டிருந்த வாசகம் மன நெகிழ்வைத் தந்தது..  மற்றும் பத்திரிகையுடனான முக்கிய கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, தொடர்ந்த ஈருருளிப் பயணம் சார்யூனியன் மாநகர சபை முதல்வரைச் சந்தித்ததுடன் மனுவும் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து Phalsbourg மாநகரை வந்தடைந்தது ஈருருளிப் பயணம்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி