கியூபெக் மாகாணத்தில் சர்ச்சைக்குரிய பிரெஞ்சு மொழிச் சீர்திருத்த மசோதா- 96 கியூபெக் சட்டமன்றத்தில் நிறைவேற்றம்..!!
கியூபெக் மாகாணத்தில் பெரும் சர்சையை ஏற்படுத்தி வந்த ''பிரெஞ்சு மொழிச் சீர்திருத்த மசோதா- 96'' இன்றைய தினம் கியூபெக் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது .
கூட்டணி அவெனிர் கியூபெக் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட மொழிச் சீர்திருத்த மசோதா 96 தொடர்பான வாக்கெடுப்பில் 78-29 என்ற எண்ணிக்கையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சிகளான லிபரல் மற்றும் பார்ட்டி கியூபெகோயிஸ் வெவ்வேறு காரணங்களுக்காக அதை எதிர்த்து வாக்களித்த நிலையில் இந்த மசோதா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. லிபரல் கட்சியினர் பிரெஞ்சு மொழி தொடர்பான வலுவான நடவடிக்கைகளை விரும்புகிற, அதே நேரத்தில் ஆங்கிலம் பேசும் கியூபெக் மக்களின் உரிமைகளை மீறுவதாகக் தெரிவித்தார்கள்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கியூபெகோயிஸ் கட்சியினர் கியூபெக்கில் பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதில் இந்த சட்டம் போதுமான அளவு வலுவானதாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய , பிரீமியர் பிரான்சுவா லெகால்ட் இந்தச் சட்டத்தைப் பற்றி பெருமிதம் கொள்வதாகக் கூறினார், மேலும் பிரெஞ்சு மொழி பேசும் மாகாணத்தின் பிரிமியனாராக , மொழியைப் பாதுகாப்பது தனது பொறுப்பு என்று கூறினார்.
இந்த சட்டம் 1977 இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டவரைபு 101 எனப்படும் மாகாணத்தின் முக்கிய பிரஞ்சு மொழி சாசனத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேசிய சட்டமன்றத்திற்கு வெளியில் இருந்து பெருகிய விமர்சனங்கள் இருந்த போதிலும் பிரீமியர் பிரான்சுவா லெகால்ட் அரசாங்கம் மிதமான மொழியியல் சீர்திருத்தம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த பிரெஞ்சு மொழிச் சீர்திருத்த மசோதா ஏற்கனவே கியூபெக் மாகாணத்தில் சுகாதார துறையில் உள்ள மொழி சலுகைகளை தொடர்ந்தும் நடைமுறைபடுத்தபடும் என்றும் அதில் எதுவித மாற்றம் கொண்டு வரப்படவில்லை என்றும் மேலும் கியூபெக் மக்கள் தொடர்ந்தும் ஆங்கிலத்தில் படிக்க அனுமதிக்கப் படுவார்கள் என்றும் பிரெஞ்சு மொழிக்கு பொறுப்பான அமைச்சர் சைமன் ஜோலின் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.