+1 514-800-2610

யுக்ரைனில் இடம்பெற்ற யுத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்...

2022-05-15 05:54
உலகச் செய்திகள்

யுக்ரைனில் இடம்பெற்ற முதலாவது யுத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

நிராயுதபாணியான யுக்ரைனியர் ஒருவரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில், குற்றம் சாட்டப்பட்ட 21 வயதான ரஷ்ய சிப்பாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட ரஷ்ய இராணுவ சிப்பாய் களவாடப்பட்ட வாகனம் ஒன்றில் வட கிழக்கு சுமி பிராந்தியத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேளை, 62 வயதான ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளார்.

தற்போது இது முதலாவதாக விசாரணையாக அமைந்துள்ள போதிலும், இது போன்ற மேலும் பல விசாரணைகள் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அரச சட்டவாதி அன்ரி சயின்யுக் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெற்ற பிரதேசம் முன்னர் ரஷ்ய துருப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வேளையில், நூற்றுக்கணக்கான யுக்ரைனியர்களின் உடல்களை கொண்ட புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த செயல்பாடு ரஷ்ய துருப்பினரால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை என மனித உரிமை ஆர்வலர்களுடன் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் குற்றம்சாட்டியுள்ளன.

இதேவேளை, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை பதவியில் இருந்து அகற்றும் நோக்கில் சதி மேற்கொள்ளப்படுவதாக யுக்ரைன் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதுடன் அதனை தடுக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றில் யுக்ரைனிய மேஜர் ஜென்ரல் கைரிலோ புடனோவ் இதனை தெரிவித்துள்ளார்.

யுக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ரஷ்யா ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் திருப்பு முனை ஒன்றை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், இந்த வருட இறுதியில் யுத்தம் முடிவிற்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தத்தில் ரஷ்யா தோற்றதன் பின்னர், விளாடிமீர் புட்டின் பதவியில் இருந்து அகற்றப்படுவதுடன் ரஷ்யா முழு அளவிலான வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.

விளாடிமீர் புட்டின் புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த செவ்வியில் யுக்ரைனிய இராணுவ மேஜர் ஜென்ரல் கைரிலோ புடனோவ் தெரிவித்துள்ளார்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி