+1 514-800-2610

மொன்றியலில் கத்திகுத்துக்கு இலக்காகி தமிழ் முதியவர் பலி - மகன் கைது..!!

2022-04-20 21:03
கியூபெக் செய்திகள்

மொன்றியல் நகரில் இடம் பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 78 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் இரவு 9:30 மணியளவில் , டி'இபர்வில்லி செயின்ட் மற்றும் லோகன் சந்திப்பிற்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மொன்றியல் காவல் துறைக்கு கிடைத்த அவரச அழைப்பை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த சென்ற காவல் துறை" காயமடைந்தவர் மயக்கமடைந்த நிலையில் இருப்பதாக எண்ணி முதலுதவி சிகிச்சைகள் அளித்த போதும் அவரது மரணம் சிறிது நேரத்திலேயே உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட பெயர் குறிப்பிட விரும்பாத பெண்மணி, நான் உயிரிழந்தவரின் வீட்டுக்கு அருகாமையில் வசித்து வருவதாகவும் நேற்றிரவு சம்பவம் நடைபெற்ற வீட்டிலிருந்து கடுமையான சத்தம் வந்ததாகவும் காலையில் 28 வயதான மகன் தந்தையாரை கொலை செய்து விட்டதை அறிந்ததாக தெரிவித்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக செய்தி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்த காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் கேப்ரியல்லா யூகிம் ''இந்த சம்பவம் தந்தை மற்றும் மகனுக்கு இடையில் இடம் பெற்ற குடும்ப தகராறு காரணமாக இருக்கலாம்'' எனவும் இது தொடர்பாக தீவிர விசாரணை இடம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக கருதப்படுகின்ற விதுஷன் அரண் என்ற இளைஞர் கைது செய்து புதன்கிழமை பிற்பகல் மொன்ட்ரியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கபட்டதாக கனடா பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி