+1 514-800-2610

கியூபெக் மாகாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் குறைவான வருமானம் பெறுகின்றவர்களுக்கு $500 உதவித்தொகை அறிவிப்பு..!!

2022-03-22 19:44
கியூபெக் செய்திகள்

கியூபெக்கின் 2022-23 நிதியாண்டுக்கான வசந்த கால பாதீட்டில் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுகட்ட $100,000 அல்லது அதற்கும் குறைவாக வருமானம் பெறுகின்ற ஒவ்வொரு வயது வந்தவருக்கும் $500 டொலர் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணத்தொகை எதிர்வருகின்ற கியூபெக் மாகாண தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக வழங்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டுக்கான வரிக் கணக்கைத் தாக்கல் செய்த பிறகு, கியூபெக் மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணம் வைப்பிலிடப்படும் என்று நிதியமைச்சர் எரிக் ஜிரார்ட் செவ்வாயன்று 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எனினும் இந்த உதவி தொகையானது அதிகரித்து செல்லும் பணவீக்கத்தின் தாக்கத்தை ஈடுசெய்வதற்காக மாத்திரமே வழங்கப்படுகின்றது. இதன் மூலம் வாக்காளரை கவர்ந்து தமது கட்சி மீண்டும் வெற்றிபெறுவதற்காக அல்ல என்றும் மேலும் 2023 இன் மத்தியில் பணவீக்கம் 2.3 சதவீதமாகக் குறையும் என்று கியூபெக் மாகாண அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தார்

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி