டொரோண்டோவில் காணாமல் போன தமிழ் இளைஞன் மற்றும் யுவதியை - போலீசார் தேடி வருகின்றனர்..!!
நார்த் யோர்க்கில் வார இறுதியில் காணாமல் போன தமிழ் ஆண் மற்றும் பெண் இருவரையும் ரொறன்ரோ பொலிஸார் தேடி வருகின்றனர்.
யோசாந்த் ஜெகதீஸ்வரன் ( 29வயது) மற்றும் பிரசாந்தி அருச்சுனன் ( 28 வயது ) ஆகிய இருவரும் காணாமல் போயுள்ளதாக டொரோண்டோ காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
யோசாந்த் கடந்த சனிக்கிழமை, ஜனவரி 15 அன்று, ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ட்ரெத்வே டிரைவ் அருகே மதியம் காணாமல் போயுள்ளதாகவும்,
பிரசாந்தி அருச்சுனன் கடைசியாக ஜனவரி 16, ஞாயிற்றுக்கிழமை இரவு 7:45 மணியளவில் ஜேன் தெரு மற்றும் ஃபிஞ்ச் அவென்யூ மேற்குக்கு பகுதிக்கு அண்மையில் பார்த்ததாகவும் காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் " உடனடியாக 911ஐ அழைக்கவும். இல்லையெனில், 416-808-2222 என்ற அவசர எண்ணை அழைப்பதன் மூலம், டொராண்டோ காவல் சேவையில் ஒருவரைக் காணவில்லை என நீங்கள் புகாரளிக்கலாம்" என்று காவல்துறை செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
http://torontopolice.on.ca/newsreleases/51983