இன்றையதினம் ஒன்ராரியோவின் தென்பகுதியினைப் பனிப்புயல் தாக்கியதைத் தொடர்ந்து அங்கு நிலைமைகள் மோசமாகியுள்ளன. பனிப்பொழிவு அதிகரித்துக் காணப்படுவதால் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரொறன்ரோ சர்வதேச விமான நிலையத்தில்பல்வேறு விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.
டொரோண்டோ பகுதியில் மாலை 2 மணி வரையில் 36 cm வரையிலான பனிப்பொழி பதிவாகியுள்ள நிலையில் பனிப்புயலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் வகுப்புக்களை இரத்துச்செய்தமையினால் மாணவர்கள் கொட்டும் பனியின் மத்தியில் தங்களின் பொழுதைக் களித்தனர்.
பனியகற்றும் வேலைகள் தாமதமாக நடைபெற்று வருவதனால் GTA அண்மித்த சில பாடசாலைகள் நாளைய தினமும் பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
பனிப்புயல் மற்றும் கடுமையான பனிப்பொழிவினைத் தொடர்ந்து ஒன்ராரியோவினது புகையிரத வலையமைப்பில் தற்காலிக மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருப்பதோடு குறிப்பிட்ட சில புகையிரதங்கள் இரத்துச்செய்யப்பட்டிருக்கின்றன.
பனி அகற்றப்படும் வேகத்தினை விட பனிப்பொழிவின் வேகம் அதிகமாக இருப்பதால் ஊழியர்கள் நெடுஞ்சாலைகளில் கடுமையாகப் போராடுகிறார்கள். விபத்துக்கள் அதிகம் இடம்பெறக்கூடிய இந்த வீதிகளில் பயணங்களை மேற்கொள்வதற்கு குறைந்தளவான சாரதிகளே துணிந்து வீதிக்கு இறங்கியுள்ளார்கள்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட டொரோண்டோ மேயர் ஜோன் டெரி டொரோண்டோ பகுதியில் பணியினை அகற்றுவதற்கு 72 மணித்தியாலங்கள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது குறிபிடத்தக்கது.
இந்தப் பனிப்பொழிவின் காரணமாக ஒன்ராரியோ, , ரொறன்ரோ, மொன்றியல், ஆகிய பிராந்தியங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.