+1 514-800-2610

விருந்தில் கலந்து கொண்டதால் ஊசலாடும் போரிஸ் ஜான்சனின் பிரதமர் பதவி..!!

2022-01-16 23:06
உலகச் செய்திகள்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் அந்நாட்டின் இளவரசருமான பிலிப் (99) காலமானதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி அவரின் உயிர் பிரிந்தது. அது இங்கிலாந்தில் கொரோனா பரவல் உச்சம் இருந்த காலகட்டம். இங்கிலாந்து மக்களின் உணர்வுகளில் அரச குடும்பத்திற்கு எப்போதுமே முக்கிய பங்குண்டு. அரச குடும்பத்திற்கு எப்போதுமே தனி மரியாதை கொடுப்பார்கள். அரசு எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர் இளவரசர் பிலிப்.

மக்கள் வெள்ளத்தில் பிலிப்பின் இறுதிச்சடங்கு நடந்திருக்க வேண்டும். ஆனால் பிலிப் உடலுடன் இரண்டாம் எலிசபெத் தனியாக அமர்ந்திருந்த காட்சி அந்நாட்டு மக்களின் மனதை உலுக்கியது. இதற்குக் காரணம் கொரோனா பரவல் தான். அதனால் இறுதிச்சடங்கில் மக்கள் கலந்துகொள்ள அரசு அனுமதிக்கவில்லை. எட்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு ஏப்ரல் 18ஆம் தேதி அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இப்போது இந்த பழைய நினைவுகளை அசைபோட காரணம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் செயல் தான்.

இளவரசர் பிலிப் மறைவுக்கு துக்கம் அனுசரிக்க முடியாமல் மக்கள் அனைவரும் முழு ஊரடங்கால் வீடுகளிலேயே முடங்கியிருந்த வேளையில் போரிஸ் ஜான்சன், அவரது அலுவலக பணியாளர்களுடன் இணைந்து நிகழ்ச்சியில் (மது பார்ட்டி) கலந்துகொண்டிருக்கிறார். குறிப்பாக எந்த தடுப்பு விதிமுறைகளையும் அவர் கடைப்பிடிக்கவில்லை. இதனை தக்க ஆதாரத்துடன் The Daily Telegraph என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டது. இதுதான் அந்நாட்டில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பிலிப்பின் இறுதிச் சடங்கு நடைபெற சில மணி நேரம் முன்பு இந்த பார்ட்டி நடைபெற்றது தான் அந்நாட்டு மக்களை ஆவேசமாக்கியுள்ளது.

இதனை ஒப்புக்கொண்ட போரிஸ் ஜான்சன் பிரிட்டன் நாடாளுமன்றத்திலேயே பகீரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அதேபோல பிரதமர் அலுவலகமும் எலிசபெத் மகாராணியிடம் தனிப்பட்ட ரீத்தியாக மன்னிப்பு கோரியுள்ளது. ஆனாலும் அவரை மக்களும் எதிர்க்கட்சி தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ஆளும் தரப்பிலிருந்தே போரிஸ் ஜான்சனுக்கு எதிராக கலகக்குரல் எழுந்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் கூறும்போது, “ பல மாத மறுப்புக்குப் பிறகு போரிஸ் கூறியிருக்கும் இந்த மன்னிப்பு பயனற்றது. சரி, இப்போதாவது போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா?” என கேட்டுள்ளார். இதனால் அவரின் பதவி ஊசலாடி கொண்டிருக்கிறது.

சொந்த கட்சியான கன்சர்வேடிவ்-ன் நிர்வாகிகள் போரிஸ் ஜான்சனின் செயலைக் கண்டித்துள்ளனர். விரைவில் அவரை நீக்கி விட்டு புதிய ஒருவரை பிரிட்டன் பிரதமராக நியமிக்கும் எண்ணத்தில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் நிகழும்போது, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனாக், பிரிட்டன் பிரதமராக வாய்ப்பு உருவாகும்.

துயர் பகிர்வு

பூரணசோதியம்மா குமாரசாமி
அல்வாய்,மீசாலை, கனடா
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada
சிவமணி கோபாலசாமி
திருகோணமலை, கோப்பாய் , வன்குவர்
கமலராணி சுந்தரராமலிங்கம்
யாழ். கோண்டாவில் -மொன்றியல்- டொரோண்டோ
சிவசுப்ரமணியம் சிவயோகன்(ரவி)
தமிழீழம் உரும்பிராய் வடக்கு (பிறந்த இடம்) ,மொன்றியல் கனடா
ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
எம்மவர் நிகழ்வுகள்

23
July
“அமர்க்களம் 2022 “
Montreal