+1 514-800-2610

தடுப்பூசி போடாதவர்களுக்கு ‘சுகாதார பங்களிப்பு’ வரி - கியூபெக் பிரீமியர் அதிரடி..!!

2022-01-12 00:46
கியூபெக் செய்திகள்

கியூபெக்கில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை காரணமாக நாளாந்தம் அதிகரித்து வருவதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கின்ற நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கியூபெக் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கியூபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட் கோவிட் - 19 பரவலை கட்டுப்படுத்தல் மற்றும் தகவல்களை விளக்கும் முகமாக செவ்வாயன்று ஊடகவியாளர்களுக்கான சந்திப்பிணை ஏற்பாடு செய்தார்.அந்த சந்திப்பில்,

கோவிட் தடுப்பூசியைப் பெறத் தவறியவர்களுக்கு ‘சுகாதார பங்களிப்பு’ வரி விதிக்கப்படும் என்று கியூபெக் பிரீமியர் ஃபிரான்சோயிஸ் லெகோல்ட் தெரிவித்துள்ளார்.அடுத்த சில வாரங்களில், கியூபெக்கில் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுக்க மறுக்கும் அனைத்து பெரியவர்களுக்கும் ‘சுகாதார பங்களிப்பு’ வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போட முடியாதவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. சரியான வரித் தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், மாகாண நிதியமைச்சர் மற்றும் சட்ட ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் பிரீமியர் கூறினார்.

கோவிட் தொற்று காரணமாக கியூபெக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 188 பேர் உட்பட மொத்தம் 2,742 பேர் தற்போது கோவிட் சிகிச்சையில் உள்ளனர். நேற்று புதிதாக 62 பேர் கோவிட் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கியூபெக் மாகாண மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்காக இருந்தாலும், தடுப்பூசி போடப்படாதவர்கள் தற்போது மாகாணத்தில் உள்ள வைத்திய சாலைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளில் 50 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்று பிரதமர் கூறினார்.

மேலும் மொன்றியல் மருத்துவமனைகளில் இதயம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் வாரங்களில் மருத்துவமனைகளுக்கு 1,000 மேலதிக பணியாளர்கள் மற்றும் 1,500 சிஎச்எஸ்எல்டிகள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரீமியர் கூறினார்.

 

துயர் பகிர்வு

பூரணசோதியம்மா குமாரசாமி
அல்வாய்,மீசாலை, கனடா
பரநிருபசிங்கம் மீனாட்சி
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montreal, Canada Toronto, Canada
பிரசாந்தி அருச்சுனன்
வேலணை, Sri Lanka (பிறந்த இடம்) North York, Canada
சிவமணி கோபாலசாமி
திருகோணமலை, கோப்பாய் , வன்குவர்
கமலராணி சுந்தரராமலிங்கம்
யாழ். கோண்டாவில் -மொன்றியல்- டொரோண்டோ
சிவசுப்ரமணியம் சிவயோகன்(ரவி)
தமிழீழம் உரும்பிராய் வடக்கு (பிறந்த இடம்) ,மொன்றியல் கனடா
ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada
எம்மவர் நிகழ்வுகள்

23
July
“அமர்க்களம் 2022 “
Montreal