எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் பிரச்சார நடவடிக்கை யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தையில் இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையிலான வேட்பாளர் குழு பிரசாரத்தில் ஈடுபட்டது.
பிரசார நடவடிக்கையில் தமிழ் மக்கள் கூட்டணியின் சக வேட்பாளர்களான வரதராஜன் பார்த்திபன், தவச்செல்வம் சிற்பரன், நல்லூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் பத்மநாதன் மயூரன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.