மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் வேட்பாளரின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த கட்சியின் ஆதரவாளர் இருவரை துண்டு பிரசுரங்களுடன் இன்று புதன்கிழமை (30) அதிகாலை 4 மணியளில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
தேர்தல் சட்டத்தை மீறி ஆரையம்பதி பிரதான வீதியிலுள்ள பகுதி சுவர்களில் சம்பவதினமான இன்று அதிகாலை 4 மணிக்கு இருவர் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த போது அவர்களை பொலிசார் கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் ஆதரவாளர்கள் எனவும் இவர்களிடம் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட சுவரொட்டிகளை கைப்பற்றியதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.