துருக்கி அரசாங்கத்திற்கு சொந்தமான விமானநிறுவனத்தின் தலைமையகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
துருக்கியின் ஏரோஸ்பேஸ் சிஸ்டத்தின் தலைமையகத்தின் மீது இருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பயங்கரவாத தாக்குதலே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அலியெர்லிகயா தெரிவித்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட இருவரும் கொல்லப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
நபர் ஒருவர் துப்பாக்கியுடன் காணப்படுவதை சிசிடிவி காண்பித்துள்ளது.
தலைநகரிலிருந்து 40கிலோமீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன..