‘தேசத்தின் குரல்’ கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பதினைந்தாவது ஆண்டு வீரவணக்க நாள் இன்று தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது.தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவருக்கு பக்கபலமாக இருந்து செயற்பட்ட கலாநிதி அன்ரன் பாலசிங்கம் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி தமிழீழ விடியலில் வரலாறானார்.
தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கத்தின்; மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப் போராட்டபாதையில் இன்றும் நிரப்ப முடியாத வெற்றிடமாகவே காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆழமாக நேசித்த ஒரு விடுதலைவீரனாக அன்ரன் பாலசிங்கம் காணப்பட்டார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அவர் ஒரு மூத்தஅரசியல் போரளியாக,அரசில் ஆலோசகராக , தத்துவ ஆசிரியராக, தமிழீழ தேசியத்தலைவர் அவர்களுக்கு அருகில் இருந்து விடுதலைப் போராட்டததிற்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துள்ளார்.
அரசியல் உலகிலும் இராஜ தந்திர உலகிலும் முடிவில்லா சாதனை புரிந்து தமிழ் மக்களின் சுதந்திர போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பெரும் போராட்டப் பணிக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவருக்கு தேசத்தின் குரல் என்ற மாபெரும் மதிப்பினை வழங்கி மதிப்பளித்தார்.
தாய்மண்ணின் விடியலுக்காக நாளும் பொழுதும் அயாராது உழைத்து, தமிழீழ விடுதலை வரலாற்றில் தடம்பதித்த ,தேசக்க காற்றில் கலந்த தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.