நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், ஒக்டோபர் மாதம் ஆரம்பித்து தற்போது வரையான காலப்பகுதியில் 1,187 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதற்கமைய, காலப்பகுதி வரை 40,598 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 17,223 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதும் இம்மாகாணத்திலேயே ஆகும்.
மேலும், வடமாகாணத்தில் யாழ். மாவட்டத்தில் 4,805 நோயாளர்களும் மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் 4,203 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணம், கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 4,108 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.மேலும், தற்போது நாட்டில் மழை வீழ்ச்சி அதிகரித்திருப்பதால் டெங்கு தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.