+1 514-800-2610

மட்டு களுவாஞ்சிக்குடியில் மோட்டர் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து.

2024-10-13 08:11
இலங்கைச் செய்திகள்

களுவாஞ்சிக்குடி கல்முனை பிராதன வீதியில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அண்மித்த பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (13) பகல் இரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொக்கட்டிச்சோலைலையை சேர்ந்த 16 வயதுடைய ரவீந்திரன் என்ற சிறுவனே சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கல்முனையில் இருந்து களுவாஞ்சிக்குடியை நோக்கி பிரயாணித்த மோட்டார் சைக்கிளும் களுவாஞ்சிக்குடியில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணித்த மோட்டார் சைக்கிளும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்க்கு அண்மையில் வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 வயது சிறுவன் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

துயர் பகிர்வு

இராசலிங்கம் மணிமாறன்
இமையாணனை - கனடா மொன்றியலில்
ராஜமோகன் ஆனந்தன்
பிறப்பிடம் - அராலி வடக்கு வதிவிடம் - கனடா மொன்றியல்
முருகேசு திருகோணேஸ்வரலிங்கம்
கல்வியங்காடு - மொன்றியல்
இராசம்மா செல்வராசா
காரைநகர் - சின்னாலடி
எம்மவர் நிகழ்வுகள்