+1 514-800-2610

கஜேந்திரனின் உரையில் தமிழீழ தேசிய தலைவரை “மேதகு பிரபாகரன்” என அழைத்ததை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் அமளி..!!

2021-11-24 22:39
இலங்கைச் செய்திகள்

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வரவு- செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், மாவீரர்களுக்கு தலைவணங்கி வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.

தனதுரையை தொடர்ந்த அவர், ஒரு கட்டத்தில் “மேதகு பிரபாகரன்” என விளித்து கூறிவிட்டார். இதன்போது சபையில் இருந்த ஆளும் தரப்பு உறுப்பினர்களில் சிலர், ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பினர்.

அப்போது, சபைக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ​​​வேலுகுமார் தலைமைத்தாங்கிக் கொண்டிருந்தார்.

முதலாவதாக ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஆளும் கட்சியின் பெண் உறுப்பினரை பார்த்து, “ வீடு கொளுத்தும் ராசாக்களுக்கு நெருப்பெடுக்கும் மந்திரிகளாக இருக்கவேண்டாம்” எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போதைப்பொருள் வர்த்தகர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிய கருத்து கடும் கண்டனத்தை தெரிவித்து உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், எமது தேசத்தின் விடுதலைக்காக முப்பது ஆண்டுகள் ஆயுதமேந்தி போராடியிருந்த எமது தேசத்தின் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் என்றார்.

இதனையடுத்தே, ஆளும் தரப்பினர், “இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவரை தேசிய தலைவர் என செல்வராசா கஜேந்திரன் எம்.பி கூறியதாக கடும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதால் சபையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்ததோடு, கஜேந்திரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் எனவும் தொடர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன்போது உரையாற்றிய கஜேந்திரன் எம்.பி, வடக்கில் போதைப்பொருள் அதிகரித்து வருகின்றதை சுட்டிகாட்டி பேசிய கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீதரனின் உரையை பார்த்து பொறுத்துகொண்டிருக்க முடியாத இராணுவ துணைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, தமிழர்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடிய எம் தேசத்தின் தலைவர் பிரபாகரனை போதைப்பொருள் வர்த்தகர் என கூறியதையும் வன்மையாக கண்டித்தார். .

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய இராஜாங்க அமைச்சர் சீத்தா அரம்பேபோல, அதியுயர் சபையில் பயங்கரவாதி ஒருவரை தேசிய தலைவராக சித்தரித்து பேசுகின்றார். உங்களுக்கு (வேலுகுமார்) மொழிப்பிரச்சினை இல்லை. கஜேந்திரன் எம்.பி கூறிய விடயங்கள் விளங்காமல் இருந்திருக்காது. ஆகவே அதனை ஹன்சார்ட்டில் இருந்து நீக்குங்கள் என்றார்.

இதன்போது பதிலளித்த வேலுகுமார் எம்.பி, செல்வராசா கஜேந்திரனுக்கு உள்ள கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தில் என்னால் தலையிட முடியாது. நான் எப்படி அதில் தலையிட முடியும்? எவ்வாறாயினும் உங்களின் கோரிக்கையை சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன் என்றார்.

இதன்போது ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வேலுகுமார் எம்.பியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஆளுந்தரப்பு உறுப்பினர் மொஹம்மட் முஸாம்மில் எம்.பி, விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட இயக்கம். இந்த நாட்டில் இலட்சக்கணக்கான மக்களை கொலைசெய்த ஒருவரை வீரராக்கி, இச் சபையில் பேச முடியாது. குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் கருத்து மக்கள் மத்தியில் வைராக்கியத்தை பரப்பும். இவ்வாறான உரைகளை சபையில் அனுமதிக்க முடியாது. எனவே உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்குங்கள் என்றார்.

உங்கள், கோரிக்கையை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என வேலுகுமார் எம்.பி பதிலளித்தார்.

எனினும், மீண்டும் குறுக்கீடு செய்த முஸாம்மில் எம்.பி, இப்போது நீங்கள் தான் சபையை வழிநடத்துகிறீர்கள். எனவே சபாநாயகர் வந்து இதனை ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டியதில்லை. அதற்கான அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது. ஹன்சாட்டில் இருந்து அதனை நீக்குங்கள் என்றார்.

முன்னால் சபாநாயகருக்கு முறையிட மட்டுமே முடியும், எனது அதிகார பரப்புக்குற்பட்ட விடயங்களையே என்னால் செய்ய முடியும் என வேலுகுமார் மீண்டும் பதிலளித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, இந்த சபையில் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. ஒரு சிலரது கருத்துக்களை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதனை நிராகரிக்க முடியாது. பல்வேறு சமூகத்தின் பிரதிநிதிகளாக இங்கு பலர் உள்ளனர். ஒரு உறுப்பினர் அவரது நிலைப்பாட்டை முன்வைக்கின்ற நிலையில், அவரின் குரலை மௌனிக்க இடமளிக்க கூடாது என்றார்.

பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு அவரது கருத்து பிடிக்கவில்லை என்பதற்காக அவரது குரலை மௌனிக்க செய்யக்கூடாது என்பதை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள வரப்பிரசாதங்களை பயன்படுத்தி பயங்கரவாத தலைவர் ஒருவரை தேசிய தலைவராக சபையில் சித்தரிக்க முடியாது. பிரபாகரனை நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தியுடன் ஒப்பிடவே இவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் பிரபாகரன் ஒரு கொலைகாரன், பயங்கரவாதி. இதனை விளங்கிக்கொள்ள வேண்டும் என ஆளுங்கட்சி பின்வரிசை எம்.பிகள் கூறினார்கள்.

 

"கருத்து சுதந்திரம்" என்ற அடிப்படையில், சிங்கள எம்பீக்கள் பாராளுமன்றத்தில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் எவ்வளவு வேண்டுமானாலும் புண்படுத்தலாம். ஆனால் ஒரு தமிழ் எம்பி, தான் நம்பும் தனது கருத்தை சபையில் கூற முடியாதா..? என சிங்களத்தில் அரசு தரப்பை பார்த்து கேட்கிறார் சபைக்கு தலைமை தாங்கும் நம்ம எம்பி வேலுகுமார்..!

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.....

பாராளுமன்றத்தில், "புலிகளின் தலைவர் பிரபாகரன் மேதகு தேசிய தலைவர்" என்ற தமிழ் பதத்தை, தனது தமிழ் உரையில் பயன்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் எம்பி கஜேந்திரனை விடவும், அதை மறுத்து "புலிகளின் தலைவர் ஒரு பயங்கரவாதி, கொலைக்காரன், அட்டூழியக்காரன் (தக்கடியா..!). ஆகவே கஜேந்திரன் எம்பியின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து அகற்றுங்கள்" எனக் கூச்சல் எழுப்பி சண்டையிடும் சிங்கள ராஜாங்க அமைச்சர் சீதா அரம்பல, விமல் வீரவன்ச கட்சியின் "முஸ்லிம் பெயர் தாங்கிய" மொஹமட் முசாம்பில் எம்பி மற்றும் ஏனைய அரசு தரப்பு சிங்கள எம்பீக்களை விடவும்,

"கஜேந்திரன் எம்பி அவர் கருத்தை கூறுகிறார். அவருக்கு பேச்சு சுதந்திரம் உள்ளது. அதை நான் எப்படி தடை செய்ய முடியும்? நீங்கள் இதுபற்றி புகார் செய்கிறீர்கள் என்றால், நான் சபாநாயகரிடம் கூறுகிறேன். ஆனால் கஜேந்திரன் எம்பி யின் உரையை ஹன்சார்ட்டில் இருந்து அகற்ற நான் இப்போது உத்தரவிட மாட்டேன்." என சுத்தமான சிங்களத்தில் மீண்டும், மீண்டும், உரக்க, உரக்க கூறுகின்ற, அந்த சந்தர்ப்பத்தில் சபைக்கு தலைமை தாங்குகின்ற, நம்ம தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) கண்டி எம்பி-ஜனநாயக மக்கள் முன்னணி பிரதிதலைவர் வேலு குமார்தான் இங்கே "அதிக துணிச்சல்கார பாராட்டுக்குரியவர்" என்பதை இங்கே கவனிக்க தவறாதீர்கள்..!

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada