+1 514-800-2610

திருகோணமலை குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை கவிழ்ந்ததில் அறுவர் பலி..!!

2021-11-23 10:11
இலங்கைச் செய்திகள்

திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட அறுவர் மரணமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றுக்காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் அந்த படகு பாதையில் 20 பேர் பயணித்துள்ளனர். அதில், சிலர் நீந்தி கரையைச் சேர்ந்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.பழைய பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் நிர்மாணிக்கப்படுவதனால், கிண்ணியா- குருஞ்சான்குளம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த படகுபாதை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இதனை விடவும் அதிகரிக்கும் என அச்சம்
கொண்டிருக்கும் பொலிஸார், கடற்படையினருடன் இணைந்து தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து கோபமடைந்த மக்கள், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலால் வீட்டின் கதவு, யன்னல்கள் மற்றும் அவற்றின் கண்ணாடிகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. அத்துடன், பாரிய படலையும் விழுத்தி சாய்க்கப்பட்டுள்ளன. தாக்குதல்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் எவையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தப் படகுப்பாதையை சீர்செய்து வழங்குமாறு பிரதேச மக்கள் இவரிடம் கேட்டதாகவும், சீரமைப்பதாக கூறி நீண்டகாலம் தாமதித்ததாகவும் மக்கள் விசனம் அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada