+1 514-800-2610

கியூபெக் மாகாணத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய கொடி நாள்..!!

2021-11-21 23:32
கியூபெக் செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயன்படுத்தி வந்த கொடியில் இருந்த எழுத்துக்கள் நீக்கப்பட்ட கொடி, தமிழீழத்தின் தேசியக்கொடியாக மாவீரர் எழுச்சி வாரத்தின் தொடக்க நாளான நவம்பர் 21ம் நாளன்று (1990) தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பிரகனடப்படுத்தப்பட்டிருந்தது. அந்நாளே (நவ 21) தமிழீழத் தேசியக்கொடி நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முரசறைந்துள்ளது.

இந்நாளினையொட்டி பல்வேறு நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகள் எங்கும்  தமிழீழ தேசிய கொடி நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினாலும், பொது அமைப்புக்களினாலும் ஏற்பாடாகி மிகவும் எழுச்சியாக நடைபெற்றுவருகிறது.

அந்த வகையில் கியூபெக் மாகாணத்திலும் கார்த்திகை 21,2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பின் கோர்ட் பகுதியில் அமைந்திருக்கின்ற ஆம்னி சென்டரில் 2 மணியளவில் மிகவும் எழுச்சி பூர்வமாக நடைபெற்றது.

தமிழீழ தேசிய கொடி நாள் நிகழ்வுகள் பொது சுடரேற்றளுடன் ஆரம்பமானது, பொதுபோது சுடரினை 2ம் லெப் .நிசாந்தி அவர்களின் சகோதரர் வை.முகுந்தன் அவர்களால் ஏற்றப்பட்டது.அதனை தொடர்ந்து கனடிய தேசிய கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசின் கியூபெக் மாகாண பொறுப்பாளர் கந்தவேல் சுப்ரமணிய தாஸ் அவர்களும் கியூபெக் மாநில கொடியினை ஸ்ரீரங்கநாதன் வஜிதன் அவர்களும் தமிழீழ தேசிய கொடியினை திருமதி .மோகன்ராஜ் சிவஞானி அவர்களும் ஏற்றிவைத்தார்கள்.

அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வுகள் கவிதை,பேச்சு, தாயகப்பாடல்கள் என மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் மொன்றியல் மற்றும் டோரியான் ஆகிய பகுதிகளை சேர்ந்த தமிழ் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டார்கள்.


வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகப் பிரதேசமான தமிழ் ஈழத்தின் தேசியக் கொடி, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின்போது உருவாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பட்ட இந்த கொடியை, தமிழீழத் தேசியக் கொடியாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1990-ம் ஆண்டு இதே தேதியில் (நவ.21) அறிவித்தார். இக்கொடியில் மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் உள்ளன.

புலிகளின் நிழல் ஆட்சி நடந்த பகுதிகளில் அனைத்து நிகழ்வுகளின் போதும் இந்த கொடியை ஏற்றும் வழக்கம் உருவானது. அதனைத் தொடர்ந்து உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில், தமது இன மற்றும் தேசிய அடையாளத்தை வெளிப்படுத்தவும், தமது எழுச்சியை வெளிப்படுத்தவும் இக்கொடியை ஏற்றும் வழக்கம் தொடர்ந்தது.

எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் 1977 ஆம் ஆண்டு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கென உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த புலிக்கொடியில் இருந்த எழுத்துக்கள் நீக்கபட்டு தமிழீழத்தின் தேசியக்கொடியாக 1990 ஆம் ஆண்டு தேசியத் தலைவர் அவர்களால் அறிவிக்கட்பட்டது. 1990 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் மாவீரர் எழுச்சிவாரத் தொடக்க நாளன்று முதல் தடவையாகத் தமிழீழத் தேசியக் கொடி எமது தேசியத் தலைவர் அவர்களால் ஏற்றிவைக்கபட்டது.

அன்றிலிருந்து தமிழீழம் (2009க்கு முன்னர்) மற்றும் புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டே தொடங்கப்படுகின்றன. தேசியக்கொடி ஏற்றப்படும்போது தமிழீழத் தேசியக்கொடி வணக்கப்பண் பாடப்படுகின்றது.

தலைவர்கள், சிறப்புக்குடிமக்கள் போன்றோரின் மறைவையொட்டி ஏற்படும் நாட்டின் துயர நிகழ்வுகளின்போது தேசியக்கொடி கொடிக்கம்பத்தின் உச்சிவரை ஏற்றப்பட்டு கொடிக்கம்பத்தின் நடுப்பகுதிவரை இறக்கிக் கட்டிப் பறக்கவிடப்படுவது வழக்கம். இதன்மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது.

எமது நாட்டை அமைப்பதற்கான விடுதலைப் போராட்டத்தை வீறு கொள்ளவைத்த, மக்களை விடுதலை இயக்கத்தின்பால் ஈர்த்து அணி திரளவைத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்குறியான (இலட்சினையான) பாயும் புலியே எமது தேசியக்கொடியின் நடுவில் அமைந்திருக்கிறது.

எமது தேசியக்கொடியை மஞ்சள்,சிவப்பு,கறுப்பு,வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன.

தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு. அந்த தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதால் அவர்களுக்குத் தன்னாட்சி(சுயநிர்ணய)உரிமை உண்டு. இந்த தன்னாட்சி உரிமை அவர்களது அடிப்படை அரசியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து,தன்னாட்சி உரிமையை நாட்டுவதற்கு தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது. மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கின்றது.

ஏற்றத் தாழ்வுகளற்ற, வர்க்க, சாதிய, முரண்பாடுகளற்ற பெண்ணடிமைத்தனமற்ற புரட்சிப்பாங்கான அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.

கரடுமுரடான, சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்த வழிக்கூடாகச் சென்று எமது இலக்கை அடைவதற்கு வேண்டிய உருக்குப்போன்ற உள்ள உறுதியைக் கறுப்பு நிறம் குறித்துக்காட்டுகின்றது.

அமைப்பினதும் போராட்டத்தினதும் தூய்மையை, நேர்மையை வெள்ளை நிறம் வெளிப்படுத்தி நிற்கின்றது.

எமது தேசியக் கொடியை நாம் எமது உயிரிலும் மேலாகப் போற்றிப் பேணிப்பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும்.

 

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada