பிரித்தானியாவில் தென்கிழக்கு லண்டனில் வீடொன்றில் பரவிய தீயினால் நான்கு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் வியாழன் மாலை ஏற்பட்டுள்ளதாகவம் தெரிவிக்கப்படுகின்றது.
Hamilton சாலையில், Bexleyheath கட்டிடமே தீப்பிழம்புகளால் சூழப்பட்டது.
சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உறவினர்கள் எனத் தெரிகிறது.
நிருபா அவரது ஒரு வயது மகள் ஷஸ்னா, 4 வயது மகன் தாபிஷ், நிருபமாவின் தாய் ஆகியோர் தீப்பிடித்து இறந்த ஒரு சோகமான சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் திருகோணமலை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்ற போதும் இதுவரை உறுதிப்படுத்தப்படவிலலை என்பது குறிப்பிடத்தக்கது.குறித்த குடும்பம் மூன்று மாதங்களுக்கு முன்புதான் இந்த வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.தீ பரவிய சந்தர்ப்பத்தில், மனைவி தனது கணவனுக்கு அழைப்பை மேற்கொண்டு தீ தீ என கதறியுள்ளதாக அவரது கணவர் கூறியுள்ளார்.
சம்பவத்தையடுத்து அயல்வீடுகளில் உள்ள அனைவரும் ஜெகா ஜெகா என கூச்சலிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கணவனின் மைத்துனராகக் கருதப்படும் ஒருவர், மேல்மாடி ஜன்னலில் இருந்து குதித்ததில் உயிருக்கு ஆபத்தான காலில் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளார்.தீ பரவிய வீட்டிற்கு முன்பாக மலர்களை வைத்து, அயலவர்கள் அஞ்சலி செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல் துறையினர் நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மயில் மதிவதனன் தனது நண்பரின் வீடு எறிவதனை கேள்விப்பட்டு அங்கு தான் விரைந்தாகவும் "அவர் அவர்களைக் காப்பாற்ற முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை," என்று நண்பர் மயில் மதிவதனன் கூறினார்.
அவரது நண்பன் லோகன் தற்போது அபே வூட்டில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது, அங்கு அவர் தனது தாய், மனைவி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் இழப்பைச் தாங்க முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்தார்.