+1 514-800-2610

புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் யார்?

2021-11-18 15:58
கனடிய செய்திகள்

பன்னிரண்டு வருடத்தின் பின் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் நிலையும் தமிழரின் பிரதிநிதிகள் யார் எனும் கேள்விக்கு விடை காண்பதுவும் இந்த கட்டுரையின் நோக்கம். கட்டுரையில் வெளி தரவுகளை அறிய கட்டுரையில் உள்ள இணைப்புகளை அழுத்தவும். புலம் பெயர் தமிழ் அமைப்புகளில் எவை பிரதிநிதிகள் தகுதி இழந்தவை என்பதையும் எப்படியான பிரதிநிதித்துவம் எதிர்காலத்தில் தேவையானது என்பதையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

செப்டம்பர்  22, 2021 அன்று ஐநாவில் 76ம் அமர்வில் சிறிலங்கா தாம் சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை மறுப்பதாக அறிவித்திருந்தது. இது வரை பல ஆயிரம் சாட்சியங்கள் இருந்தும் ஒரு சிறிலங்கா இராணுவம் கூட தண்டிக்கப்படாத போது, சிறிலங்கா இன அழிப்பு அரசே தமது கங்காரு நீதிமன்றில் விசாரிப்பதாக ஐநாவில் கூறியது 2015 ஆம் ஆண்டு தீர்மானித்த நீதிக்கான ஐநாவின் கலப்பு நீதிமன்றம் மற்றும் ஏனைய பொறிமுறைகளை பகிரங்கமாக மறுத்தது பற்றி இது வரை தாம் தமிழரின் நீதிக்காக செயல்படுகிறோம் என்று கூறிய சில புலம் பெயர் தமிழ் அமைப்புக்கள் தொடர்ந்து கண்டிக்க தவறியுள்ளது. கடந்த ஜனவரி 15, 2021 அன்று மூன்று தமிழ் கட்சிகளும் ஈழத்திலிருந்து ஐநாவுக்கு தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதிமன்று வேண்டும் என தெளிவாக கூறியும் இருந்தது.

ஐநா மற்றும் அமெரிக்கா பிரித்தானியா கனடா போன்ற நாடுகளுக்கு ஐநாவில் தீர்மானித்த படி சர்வதேச நீதிமன்ற போர்க்குற்ற விசாரணைகளை சிறிலங்காவுக்கு எதிராக உடனே ஆரம்பித்து சிறிலங்காவின் மறுப்பை பகிரங்கமாக நிராகரியுங்கள் என்று கேட்க வேண்டிய தமிழ் அமைப்புகள் சில சிறிலங்காவுடன் தாம் பேச தயார் என்று அறிக்கைகளில் ஈடுபட்டது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை இழிவு செய்வதாக உள்ளது. இத்தகைய தெரிந்தே ஏமாற்றும் செயல்பாடுகளையும் அதை செய்யும் அமைப்புகளை நேரடியாக கண்டிப்பது அவசியம். புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் யார் என்று காட்டுவது மட்டும் தான் இந்த அறிக்கைகளின் ஒரே நோக்கமாகவும் தேவையாகவும் உள்ளது. புலம் பெயர் தமிழர்களை தவறாக 2015 இல் பிரதிநிதி படுத்திய அமைப்புகளையும் அவர்களின் பொய் தோற்றத்தையும் இனம் காண்பது மிக அவசியமாகிறது. கடந்த 12 வருடத்தில் புலம் பெயர் தமிழரின் பிரதிநிதிகள் யார் என்பதையிட்டு சில தரவுகளை பகிர்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

2009 இற்று முன்னர் தமிழீழம் என்று ஒரு நாட்டில் புலிகளும் மக்களும் தியாகங்களின் ஊடாக நிலை பெற்றிருந்த போது, புலம் பெயர் தமிழ் பிரதிநிதிகள் என்று ஒன்று வேண்டியதாக இருக்கவில்லை. புலிகளுக்கான தமிழர்களின் ஆதரவு அவர்களின் ஓர்மம், அறம், தியாகம், வீரம், தமிழீழ நாட்டை உலகில் உன்னத மாண்புகளுடன் அமைத்தது, அதிலும் அதிக நேர்மையான தலைமை என பல விடயங்கள் மூலம் தான் பெருகியது. புலிகளுக்கான தமிழர்களின் ஆதரவு அவர்களின் உறுதி மற்றும் வெளிப்படை தன்மையாலும் தான் பெருகி இருந்தது. பேச்சுவார்த்தைகளில் ஒவ்வொரு நிலையிலும் மக்களுக்கு பொறுப்பு கூறுவதை அவர்கள் முதன்மையாக கொண்டிருந்தனர்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் சரி இடைக்கால தீர்வாக ISGA போன்ற விடயங்கள் மற்றும் சர்வதேச பேச்சு வார்த்தைகளில் மக்களுக்கு தெளிவூட்டுவதில் மிக கவனமாகவும் இருந்தனர். இதனால் தான் மக்களும் அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து புலம் பெயர் தேசங்களிலும் அவர்களின் பிரதிநிதித்துவத்த்தை உறுதிப்படுத்தினர். தமிழீழ அரசின் தூதர்களாகவே அன்றைய புலம் பெயர் தமிழ் அமைப்புகள் இயங்கின. 2009 இற்று பின்னர் தமிழீழ அரசும் புலிகளும் மறைந்த பின்னர் புலம் பெயர் தமிழருக்கு தலைமை எதுவும் இருக்கவில்லை. புலிகளின் கடைசி சர்வதேச தலைவர் KP பத்மநாதன் ஆகவே இருந்தார். நாடுகடந்த தமிழீழ அரசு (TGTE) புலிகளின் ஒரு தொடர்ச்சியாக இருந்தது. ஆனால் புலிகளுக்கு கிடைத்த ஆதரவு TGTE இற்கு கிடைத்திருக்கவில்லை.

அதே கால பகுதியில் உலக தமிழர் பேரவை (GTF) பல நாடுகளில் இருந்து தமிழ் அமைப்புகளால் உருவாக்க பட்டிருந்தது. இதே கால பகுதியில் TGTE இற்கு மாற்றாக மக்களவை (ICET) என்று ஒன்றும் உருவாகி இருந்தது. இதில் இன்று வரை குறைபாடுகள் மற்றும் செயல்பாடு போதாமல் இருந்தாலும் அன்று தொடங்கிய கொள்கையில் நிலைத்து இருப்பது TGTE மட்டுமே. GTF அமைப்பு இரு வருடம் இயங்கிய பின்னர் பேச்சாளர் சுரேந்திரன் ஈழத்தில் தமிழரசு கட்சி (TNA) சுமந்திரன் பிரிவுடன் இணைந்து சிறிலங்காவின் UNP கட்சியின் ஒரு பிரிவாக 2015 இல் இயங்க தொடங்கியது. ICET செயல்பாடுகள் இன்றி அறிக்கைகளுடன் முடங்கியது. மொத்தத்தில் புலிகள் இல்லாத தமிழினம் ஈழத்தில் நிலமும் இருப்பும் இழந்து போக புலத்திலும் தமிழ் அமைப்புகள் விலை போயும் உணர்விழந்தும் போயின. புலத்தில் தமிழ் அமைப்புகள் சிறப்பாக செயல்பட வாய்ப்பிருந்தும் அறிக்கைகளிலும் மூடிய அறைக்குள் பேச்சிலும் தாமும் மயங்கி மக்களையும் மயக்க முயன்றதே இவர்களின் தவறாகும்.

கடந்த பன்னிரண்டு வருடங்களில் முதல் நான்கு வருடங்கள் தான் நீதிக்கான முழு முயட்சிகளை புலம் பெயர் சமூகம் எடுத்திருந்தது. இதன் போது தமிழரசு கட்சி (TNA) இந்தியா புலிகளின் பின் தீர்வு தருவதாக நம்பியிருந்தது. அதனால் புலிகளால் ஆரம்பிக்க பட்டிருந்தாலும் அவர்களின் தலைமை புலிகளின் வரலாற்றை குறைசொல்வதிலேயே காலம் கடத்தியது. 2009 இலிருந்து 2014 வரை, புலம் பெயர் தமிழ் அமைப்புகள் பல நாடுகளில் சிறு குழுக்களாக நீதிக்காக குரலெழுப்பினர்.

ஆனால் இந்த நீதிக்கான குரல்களை இலங்கையில் தமக்கு சார்பான ஒரு ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்க இந்தியா போன்ற நாடுகள் பாவித்தன. GTF (Global Tamil Forum), கனடிய தமிழ் காங்கிரஸ் (CTC), USTAG, ATC என்பன 2015 இலிருந்து இந்த ஆட்சி மாற்றத்தில் வந்த சிறிலங்காவின் UNP கட்சியுடன் இணைந்து ஒரு தீர்வுக்கு உழைப்பதாக கூறி நீதிக்கான குரல்களை குறைத்தன. பின்னர் GTF/TNA/CTC முழுமையாக சிறிலங்காவின் UNP என வலம் வர, ராஜபக்சே ஆட்சி சீனாவுடன் மீண்டும் 2019 இல் வர, 2020 இல் USTAG/ATC விலகிக்கொண்டன. முடிவில் 2020 இல் GTF முழுமையாக அழிந்தது. இதில் GTF/CTC/USTAG என்பன சிறிலங்கா அரசுடன் மறைமுக பேச்சுவார்த்தைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தன ஆனால் இவற்றை புலம் பெயர் தமிழர்களுக்கு தெரிவிக்காமல் மறுத்திருந்தார். மொத்தத்தில் புலம் பெயர் தமிழரின் பலத்தை தவறாக பயன்படுத்தி அதை இழக்க செய்ததும் இந்த CTC/GTF/USTAG மூன்று அமைப்புகளும் தான். இதற்கான விளக்கத்தை இவர்கள் இதுவரை வழங்கவில்லை. இவர்கள் எதிர்காலத்தில் புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதிப்படுத்தும் தகுதியை முழுமையாக இழக்கிறார்கள்.

GTF அமைப்பு புலம் பெயர் தமிழர்களை இனி பிரதிநிதிப்படுத்த முடியாது என விளக்கமாக பல முறை அறிக்கைகள் கூறியிருந்தன. கனடிய தமிழர் பேரவை தவிர எஞ்சிய எல்லா அமைப்பும் இந்த கூட்டிலிருந்து விலகின. அண்மையில் அதன் பேச்சாளர் சுரேன் தம்முடன் கனடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் ஏற்கனவே மூடப்பட்டிருந்த UK Tamil Congress போன்ற அமைப்புகள் மூன்றின் பெயர்களை கூறியிருந்தார். பின்கதவு பேச்சுக்களில் 2015 இல் இருந்து ஈடுபடுவதால் யாருமே இவர்களுடன் இல்லை. இல்லாத GTF அமைப்பை இருப்பதாக காட்டும் முயட்சியில் ஈடுபடுவது இந்தியா சிறிலங்கா நாடுகளுக்கு தமது முகவராக புலம் பெயர் தமிழர்களில் ஒரு அமைப்பு தேவை என்பதை தவிர வேறு காரணம் இருக்க முடியாது. CTC அமைப்பு புலிகள் காலத்தில் இருந்தபோதிலும் 2009 இற்று பின்னர் அது TNA போல புலிகளின் வரலாற்றை மறுத்து அவர்கள் மேல் பழியை போட்டு சிறிலங்கா UNP கட்சியின் வெளிநாட்டு கிளை போல இயங்குவதால். இந்த அமைப்புக்கும் புலம் பெயர் தமிழர்களின் ஆதரவு இல்லை. மாறாக அது இன்று தெரு விழா மற்றும் பொது விழாக்கள் மட்டுமே இயக்கம் ஒன்றாக மாறியுள்ளது.

இதே கால பகுதியில் BTF, NCCT என்பன தமிழின அழிப்பு என்பதை கூறுவதில் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனாலும் இவர்களால் USTAG/ATC/CTC போன்றவற்றை தவிர்த்து செயல்பட முடியவில்லை. பொதுவாக புலம் பெயர் தமிழ் அமைப்புகள் ஐநாவில் பல வேலைகளை செய்ததாக கூறியிருந்தாலும் கடந்த 12 ஆண்டுகளில் UN ECOSOC அமைப்புகள் மூலம் சமர்ப்பித்த கிட்டத்தட்ட 300 ஈழம் சார்ந்த அறிக்கைகளை பார்க்கும் போது அதில் இந்த அமைப்புகளின் அறிக்கைகளை காண முடியாது. 2015 இற்று பின்னர் புலம் பெயர் அமைப்புகளின் பணி எப்படியானது என அறிவதோ அல்லது அது பற்றிய செயல் நிதி அறிக்கைகளோ மிக அரிது. இந்த நிலையில் கடந்த வருடம் ஐநாவின் தீர்மானத்தில் இருந்து விலகுவதாக சிறிலங்கா அறிவித்திருந்தது. இந்த நிலையில் தான் புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகள் யார் என்பதை சொல்லும் போட்டி இப்போது எழுகிறது. அதுவும் சிறிலங்காவுடன் பேசப்போவதில் தான் இந்த போட்டி எழுவது பெரும் வியப்பு.

2021 August மாதத்தில், பின்வரும் 8 புலம் பெயர் அமைப்புகளும் தாம் சர்வதேச மத்தியஸ்தத்துடன் சிறிலங்காவுடன் பேச தயார் என அறிக்கை விட்டனர். “Australian Tamil Congress (ATC), British Tamils Forum (BTF), Maison du Tamil Eelam (France), Irish Tamils Forum (ITF), National Council of Canadian Tamils (NCCT), Norwegian Council of Eelam Tamils (NCET), Solidarity Group for Peace and Justice (SGPJ — South Africa), United States Tamil Action Group (USTAG)”. ஏன் இந்த அவசர தேவை எழுந்தது என்று பதில் காண்பது கடினம். இதனை தொடர்ந்து தனிநபராக GTF சுரேன் தமது பங்குக்கு தானே பிரதிநிதி என அறிவித்தார். இதில் தம்முடன் இருக்கும் “UK Tamil Congress” 2020 இல் கலைக்க பட்டதை கூட தெரியாமல் கணக்கு காட்டி இருந்தார். இதை தொடர்ந்து BTF அமைப்பின் பிரமுகர் கூறினார் என IBC எட்டு தமிழ் அமைப்புகள் பேச தயார் என கூறி இருந்தது. பின்னர் NCET தமக்கும் இந்த கூட்டுக்கும் சம்பந்தம் இல்லை என கூறிஇருந்தது. USTAG இன் இஸ்தாபகர் ஒருவரும் இந்த அறிக்கை USTAG இன் சம்மதம் பெறாமல் வெளிவந்தது என கூறியிருந்தார். செய்தியில் NCCT நீக்கபட்டு CTC இன் பெயர் போடப்பட்டிருந்தது. முழுமையாக குழம்பி உள்ள இந்த எட்டு தமிழ் அமைப்புகளை யார் வழிநடுத்துகிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது.

கடந்த பன்னிரண்டு வருடத்தில் சிறிலங்காவின் ஆட்சிமாற்ற நாடகம் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் வலிமையை பாரிய அளவில் பாதித்துள்ளது. இப்போது இதன் இரண்டாம் பாகம் இப்போது ஆரம்பமாகிறது. GTF/CTC போன்றவை 2015 இல் தமிழின அழிப்பு என்பதை வடக்கு மாகாண சபையே தெளிவாக தீர்மானமாக கூறிய பின்னரும், சிறிலங்காவின் கூட்டு முகவர்களாக சிறிலங்காவை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க செயல்பட்டது என்று அறியப்படுவதினால், இவர்கள் மிக தெளிவாக புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதிப்படுத்த முடியாது என்பது தெளிவானது.

புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதி யார் எனும் போட்டியில் ஒதுங்கி இருந்து நீதிக்கான பணி செய்யும் தமிழ் அமைப்புகள் நூற்று கணக்கில் உலகெங்கும் இப்போது உள்ளது. தமிழின அழிப்பை ஆவணப்படுத்தல், ICC இற்கு நீதிக்காக நேரடியாக செல்லல், UNHRC இற்று நேரடியாக நிலைமைகளை கொண்டு செல்லல். புலம் பெயர் தேசங்களில் தமிழ் இன அழிப்பு நினைவகங்கள் அமைத்தல், புலிகள் மீதான தடை நீக்கி தமிழீழ வரலாற்றின் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்த்தல், அந்த அந்த நாட்டு அரசுகளை சிறிலங்காவின் தமிழின அழிப்பை அங்கீகரிக்க கோருதல் சட்ட ரீதியான கேள்வி எழுப்பல் என பல செயல்பாடுகளை புதிய பல அமைப்புகள் முன்னெடுக்கின்றன.

இவர்கள் தம்மை புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளாக இன்னமும் காட்டிட விரும்பவில்லை. செயல்பாடுகளிலேயே கவனமாய் உள்ளனர். ஆனால் இந்த அமைப்புகள் இனி வரும் காலங்களில் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

பின்னரும், சிறிலங்காவின் கூட்டு முகவர்களாக சிறிலங்காவை போர்க்குற்றங்களில் இருந்து பாதுகாக்க செயல்பட்டது என்று அறியப்படுவதினால், இவர்கள் மிக தெளிவாக புலம் பெயர் தமிழர்களை பிரதிநிதிப்படுத்த முடியாது என்பது தெளிவானது. புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதி யார் எனும் போட்டியில் ஒதுங்கி இருந்து நீதிக்கான பணி செய்யும் தமிழ் அமைப்புகள் நூற்று கணக்கில் உலகெங்கும் இப்போது உள்ளது. தமிழின அழிப்பை ஆவணப்படுத்தல், ICC இற்கு நீதிக்காக நேரடியாக செல்லல், UNHRC இற்று நேரடியாக நிலைமைகளை கொண்டு செல்லல். புலம் பெயர் தேசங்களில் தமிழ் இன அழிப்பு நினைவகங்கள் அமைத்தல், புலிகள் மீதான தடை நீக்கி தமிழீழ வரலாற்றின் விழுமியங்களை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்த்தல், அந்த அந்த நாட்டு அரசுகளை சிறிலங்காவின் தமிழின அழிப்பை அங்கீகரிக்க கோருதல் சட்ட ரீதியான கேள்வி எழுப்பல் என பல செயல்பாடுகளை புதிய பல அமைப்புகள் முன்னெடுக்கின்றன. இவர்கள் தம்மை புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளாக இன்னமும் காட்டிட விரும்பவில்லை. செயல்பாடுகளிலேயே கவனமாய் உள்ளனர். ஆனால் இந்த அமைப்புகள் இனி வரும் காலங்களில் ஒதுங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை..


இனி புலம் பெயர் தமிழர்கள் ஒரு கொள்கை கூட்டில் இணைவார்களே அன்றி இந்தியாவையே அமெரிக்காவையே பேச்சளவில் நம்பி ஏமாற தயாராக இல்லை. இதை நேரடியாக சொல்வதற்கும் தயங்கவும் போவதில்லை. நீதிக்கான முயட்சிகள் தொடரத்தான் போகின்றன. இன்னும் பல வருடங்களுக்கு புலம் பெயர் தமிழருக்கு பிரதிநிதி என்று ஒரு கூட்டு வர வாய்ப்பு கொள்கை அடிப்படையில் தான் இருக்கும். அதனால் தமிழ் அமைப்புகள் தாம் தான் பிரதிநிதி என்று பேச்சுக்கு செல்ல எத்தனிக்காமல் சிறு நீதிக்கான விடயங்களை செய்ய எத்தனிக்க வேண்டும். இல்லையேல் இந்த BTF/USTAG/ATC போன்ற அமைப்புகள் மேலும் அந்நியபட வேண்டி இருக்கும். இதில் USTAG அமைப்பை GTF/CTC ஐ தவிர்த்தது போல முழுமையாக எதிர்காலத்தில் தவிர்ப்பது தான் ஒரே வழி. இல்லையேல் அவர்களை கூட்டு சேர்க்கும் கூட்டுகள் அவர்களின் 2015 செயல்பாடுகளுக்கு பதில் சொல்லவேண்டி இருக்கும்.

உலகில் பரந்து இருக்கும் நீதிக்கான முயற்சிகளில் செயலாற்றி வரும் புலம் பெயர் தமிழ் அமைப்புகள் தமக்கான ஒரு கொள்கை சார் கூட்டை இப்போது ஆரம்பித்தால் இனிவரும் வருடங்களில் ஒரு நேர்மையான பொறுப்பான வெளிப்படையான புலம் பெயர் தமிழருக்கான பிரதிநிதிகளை உருவாக்கும் வாய்ப்பு உண்டு. ஒரு உறுதியான புலம் பெயர் தமிழ் அமைப்பை தமது தேவைக்கு பயன்படுத்த முடியாது என்பதால் அதை அமெரிக்காவோ இந்தியாவோ விரும்பாது. ஆனால் நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புகள் கொள்கையளவில் ஒருங்கிணைந்து தமது நேரடி வாக்குகளால் இந்த பிரதிநிதித்துவத்தை அமைத்தால் இந்தியாவோ அமெரிக்காவோ சீனாவோ எதிர்க்க முடியாது.

-வேல்-

https://vettivel.medium.com/tamil-diaspora-representation-303feb9dd664

துயர் பகிர்வு

ஆழ்வார் சின்னத்துரை
யாழ் அச்சுவேலி - மானிப்பாய்
அபின்சன் கந்தையா
மொன்றியல்,கனடா
பெரியதம்பி சிவக்கொழுந்து
வேலணை-இலங்கை (பிறந்த இடம்) உருத்திரபுரம், மொன்றியல்,கனடா
விஜயகுமார் விஸ்வலிங்கம்
வல்வெட்டி(பிறந்த இடம்) மொன்றியல் , கனடா
நல்லையா நதீஸ்குமார்
கோண்டாவில் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
தங்கராணி சிவானந்தம்
யாழ். வல்வெட்டித்துறை ஊரிக்காடு
சிவப்பிரகாசம் செல்வநாயகி
வறுத்தலைவிளான்(பிறந்த இடம்) Scarborough - Canada Brampton - Canada Montreal - Canada
சரவணமுத்து சுபாநந்தா
வல்வெட்டித்துறை(பிறந்த இடம்) கனடா
முத்தையா ஸ்ரீபகவான்
கல்வியங்காடு(பிறந்த இடம்), கனடா
ராசையா ஜெயாநிதி
அல்வாய் வடக்கு(பிறந்த இடம்) அரியாலை Montreal - Canada
லதா சிவஞானேஸ்வரலிங்கம்
உரும்பிராய் கிழக்கு(பிறந்த இடம்) Montreal - Canada
சிவசங்கரி சிவராமன் (தாரணி)
Montreal - Canada(பிறந்த இடம்)
பாலசிங்கம் திரவியம் (சின்னமணி)
யாழ். தோப்பு ,அச்சுவேலி- பிறப்பிடம்
சுப்பிரமணியம் பரஞ்சோதி
யாழ் காங்கேசன்துறை பிறப்பிடம், யாழ் இன்பர்சிட்டி வதிவிடம்
நடராசா தங்கேஸ்வரி
யாழ் கல்வியன்காடு பிறப்பிடம், கனடா ரொரன்ரோ வசிப்பிடம்
பரம்சோதி கமலாதேவி
யாழ். சிருவிளான் இளவாலை பிறப்பிடம், கனடா மொன்றியல் வதிவிடம்
நிக்கிலஸ் அன்ரனி (அலிஸ்ரன்)
நாரந்தனை(பிறந்த இடம்) புலோலி Montreal - Canada
பவளராசா நாகம்மா
பண்டத்தரிப்பு(பிறந்த இடம்) Montreal - Canada
நாரயணசாமி சரோயினி அம்மா
யாழ்ப்பாணம் பருத்திதுறை (பிறப்பிடம்), பளை, திருக்கோணமலை (வதிவிடம்)
NJ REAL ESTATE SIGN RENTAL
சுன்னாகம்(பிறந்த இடம்) ஜேர்மனி Montreal - Canada
ஜெகநாதன் அருணாசலம்
யாழ்ப்பாணம் விடத்தட்பளை, உசன் பிறப்பிடம், மொன்றியல் வதிவிடம்
பாலச்சந்திரன் கமலாம்பிகை
பிறந்த இடம் நெடுந்தீவு ஸ்கந்தபுரம் (வதிவிடம் பிரான்ஸ்)
இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
யாழ். சிறுப்பிட்டி மத்தி (பிறந்த இடம்)- Montreal – Canada
நடராஜா ராஜலட்சுமி
காரைநகர்(பிறந்த இடம்) Montreal - Canada