கூட்டமைப்பாக மீண்டும் ஒன்றினைவதற்காக எந்த அழைப்பும் தங்களுக்கு வரவில்லை - கஜேந்திரகுமார்
2024-10-01 08:55
இலங்கைச் செய்திகள்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக மீண்டும் ஒன்றினைவதற்காக எந்த அழைப்பும் தங்களுக்கு வரவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைந்து கொள்ளுமாறு இலங்கை தமிழரசுக் கட்சி அழைப்பு ஒன்றை விடுத்திருந்தது.
இந்த விடையம் தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.